CWG 2022: மகளிர் டி20,ஆண்கள் ஹாக்கி அரையிறுதி!9வது நாள் இந்தியாவின் முழு அட்டவணை
Aug 06, 2022, 02:26 PM IST
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மல்யுத்த போட்டியின் முதல் நாளில் பங்கேற்ற 6 வீரர்களுக்கு இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்று தந்துள்ளனர். 9வது நாளான இன்று இந்தியா - இங்கிலாந்து இடையேயான மகளிர் டி20 அரையிறுதி, இந்தியா - தென்ஆப்பரிக்கா இடையே ஆண்கள் பிரிவு ஹாக்கி அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளன.
பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் 8வது நாளான நேற்று இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன்மூலம் தற்போது இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கையானது 26 என உயர்ந்துள்ளது. அத்துடன் பதக்க பட்டியலிலும் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா ஆகியோர் தங்க பதக்கத்தையும், அன்ஷு மாலிக் வெள்ளிப்பதக்கத்தையும், திவ்யா காக்ரன், மோஹித் க்ரீவால் ஆகியோர் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். அதேபோல் லான் பெளல் ஆண்கள் 4 பேர் அணி போட்டியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளின் 9வது நாளான இன்று (ஆகஸ்ட் 6), மல்யுத்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து வினேஷ் போகத், ரவிக்குமார் தாஹியா என புதிதாக 6 பேர் பங்கேற்கவுள்ளனர். மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து இடையே அரையிறுதி போட்டியும், ஆண்கள் பிரிவு ஹாக்கி தொடரில் இந்தியா - தென்ஆப்பரிக்கா அணிகளும் மோதவுள்ளன.
காமன்வெல் விளையாட்டு போட்டிகள் 9வது நாள் முழு அட்டவணை: