தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: இறுதி நாளான இன்று இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி!

CWG 2022: இறுதி நாளான இன்று இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி!

Aug 08, 2022, 11:52 AM IST

காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளான இன்று இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. மொத்தம் ஆறு பதக்கத்துக்கான போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது.பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆண்கள் ஹாக்கி இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெறுகிறது.

காமன்வெல்த் போட்டிகளின் 10வது நாளான நேற்று (ஆக்ஸ்ட் 7) இந்தியா பதக்க மழையில் நனைந்த நாளாக அமைந்தது. 4 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களை ஒரே நாளில் வென்றதோடு மட்டுமில்லாமல் பதக்கபட்டியிலிலும் 50ஐ கடந்து தற்போது 55 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Olympic: ‘நாங்கள் நேரத்தை மேம்படுத்த வேண்டும்’: இந்திய ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே குழு பிளேயர் ராஜீவ் ஆரோக்கியா

இதைத்தொடர்ந்து, இத்தொடரின் 11வது நாளாகவும், கடைசி நாளானவும் இன்று (ஆக்ஸ்ட் 8) இந்தியா அணி 6 பதக்கம் விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளது. இதில் ஐந்தில் கட்டாயம் பதக்கம் பெறுவது உறுதியாகியுள்ளது.

பேட்மிண்டன் விளையாட்டில் 3 தங்க பதக்கத்துக்கான போட்டி நடைபெறுகிறது. ஒற்றைர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து, லக்‌ஷயா சென் ஆகியோரும், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராங் ஷெட்டி ஆகியோர் மோதவுள்ளனர்.

இதேபோல் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஷரத் கமல் நான்காவது பதக்கத்துக்கும், ஜி சத்ரியன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாடவுள்ளார்.

மிக முக்கியமான போட்டியாக் மான்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

காமன்வெல்த் போட்டிகள் இறுதிநாள் முழு அட்டவணை:

நேரம்போட்டிபோட்டியில் பங்கேற்பவர் மற்றும் இதர விவரங்கள்
1:20PMபேட்மிண்டன்பெண்கள் ஒற்றையர் பிரிவு - பிவி சிந்து
2:10PMபேட்மிண்டன்ஆண்கள் ஒற்றையர் பிரிவு - லக்‌ஷயா சென்
3:00PMபேட்மிண்டன்ஆண்கள் இரட்டையர் பிரிவு - சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராங் ஷெட்டி
3:35PMடேபிள் டென்னிஸ்ஆண்கள் ஒற்றைர் பிரிவு வெண்கல பதக்கம் - ஜி சத்ரியன்
4:25PMடேபிள் டென்னிஸ்ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி - அச்சந்தா ஷரத் கமல்
5:00PMஹாக்கிஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி - இந்தியா vs ஆஸ்திரேலியா

அடுத்த செய்தி