தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

CWG 2022: இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

Karthikeyan S HT Tamil

Aug 07, 2022, 07:39 PM IST

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்தை வீழ்த்திய வெண்கலப் பதக்கம் வென்றது.
காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்தை வீழ்த்திய வெண்கலப் பதக்கம் வென்றது.

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்தை வீழ்த்திய வெண்கலப் பதக்கம் வென்றது.

பெர்மிஹங்காம்: பிரிட்டனின் பெர்மிங்ஹாமில் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் போட்டியில், இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இதில் (ஆகஸ்ட் 7) இன்று நடந்த மகளிருக்கான ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

இதையடுத்து, ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டதில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஹாக்கியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்களைப் தற்போது வரை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி