தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆண்கள் ஹாக்கி அணி!

CWG 2022: அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆண்கள் ஹாக்கி அணி!

Aug 05, 2022, 09:53 PM IST

ஹர்மன்ப்ரீத் சிங் அடித்த ஹாட்ரிக் கோல் மூலம் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஹர்மன்ப்ரீத் சிங் அடித்த ஹாட்ரிக் கோல் மூலம் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஹர்மன்ப்ரீத் சிங் அடித்த ஹாட்ரிக் கோல் மூலம் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் குரூப் பி பிரிவில் வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 19, 20, 40வது நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதன் பின்னர் ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் மற்றொரு கோல் அடிக்க அணியின் ஸ்கோரானது 4-0 என இருந்தது.

ஆட்டம் முடிய மீதம் 11 நிமிடங்கள் மற்றும் இருந்த நிலையில், 4 கோல்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கினர். வேல்ஸ் அணி வீரர் கரேத் ஃபர்லாங் ஆட்டத்தின் 55வது தங்களது அணிக்காக முதல் கோல் அடித்தார்.

இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி அடுத்ததாக கனடா அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இருப்பினும் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே 22 கோல்கள் வித்தியாசம் இருப்பதால் இந்த குரூப்பில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

அடுத்த செய்தி