தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022:நிறைவு விழாவில் நிக்கத் ஜரீன், ஷரத் கமால் தலைமையில் அணிவகுப்பு

CWG 2022:நிறைவு விழாவில் நிக்கத் ஜரீன், ஷரத் கமால் தலைமையில் அணிவகுப்பு

I Jayachandran HT Tamil

Aug 08, 2022, 04:50 PM IST

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 நிறைவுவிழாவில் தங்கப்பதக்க வீரர்கள் நிக்கத் ஜரீன், ஷரத் கமால் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 நிறைவுவிழாவில் தங்கப்பதக்க வீரர்கள் நிக்கத் ஜரீன், ஷரத் கமால் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 நிறைவுவிழாவில் தங்கப்பதக்க வீரர்கள் நிக்கத் ஜரீன், ஷரத் கமால் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்மிங்ஹாம் : ஜூலை 28ஆம் தேதியன்று இங்கிலாந்தில் உள்ள பெர்மிங்ஹாம் நகரில் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Olympic: ‘நாங்கள் நேரத்தை மேம்படுத்த வேண்டும்’: இந்திய ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே குழு பிளேயர் ராஜீவ் ஆரோக்கியா

Federation Cup 2024: ஃபெடரேஷன் கோப்பை 2024 போட்டியில் ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்பு

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

போட்டியின் தொடக்கவிழாவில் இந்திய அணியை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் ஆடவர் கிரிக்கெட் அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் தேசியக் கொடியை ஏந்தி தலைமை தாங்கிச் சென்றனர்.

இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று இரவு பெர்மிங்ஹாம் நகர நேரப்படி முடிவடைகிறது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி இந்திய வீரர்கள் நிக்கத் ஜரீன், ஷரத் கமால் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி வீறு நடை போடவுள்ளனர்.

தற்போது நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

டேபிள் டென்னிஸ் வீராங்கனையான ஷரத் கமால் இதுவரை 13 பதக்கங்களை காமன்வெல்த் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளார். இருவரும் சேர்ந்து இந்திய அணியை நிறைவுவிழாவில் தலைமையேற்று செல்வர். 9 பதக்கங்களை வென்ற நிலையில் இந்த போட்டியில் 4 பதக்கங்களை கமால் வென்றுள்ளார்.

தனிப்பிரிவிலும், மிக்ஸடு பிரிவிலும் இந்த முறை தங்கப்பதக்கங்களை அவர் வென்றுள்ளார். ஜி சத்தியனுடன் சேர்ந்து ஆடவர் இரட்டையர் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 40 வயதான ஷரத் கமால் இந்திய அணியை வழிநடத்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது உள்ளபடியே அவருக்கு தரப்பட்ட பெருமைக்குரிய அங்கீகாரம் என்றால் மிகையாகாது.

அதேவேளையில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ள நிக்கத் ஜரீன் பெருமைக்குரிய ஸ்ராட்ண்ஜா நினைவுக் கோப்பையை கடந்த ஜனவரி மாதத்தில் கைப்பற்றினார். மே மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர்.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 18 தங்கம் உள்பட 55 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 66 தங்கம் உள்பட 174 பதக்கங்களை குவித்துள்ளது.

அடுத்த செய்தி