தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: எல்லா முக்கிய பைனல்களிலும் தவறு செய்கிறோம்- ஹர்மன்பிரீத் கௌர்

CWG 2022: எல்லா முக்கிய பைனல்களிலும் தவறு செய்கிறோம்- ஹர்மன்பிரீத் கௌர்

I Jayachandran HT Tamil

Aug 08, 2022, 06:21 PM IST

அனைத்து முக்கிய பைனல் போட்டிகளிலும் நாம் தவறு செய்கிறோம் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் வேதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து முக்கிய பைனல் போட்டிகளிலும் நாம் தவறு செய்கிறோம் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் வேதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து முக்கிய பைனல் போட்டிகளிலும் நாம் தவறு செய்கிறோம் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் வேதனை தெரிவித்துள்ளார்.

பெர்மிங்ஹாம்: 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோற்றது குறித்து இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் விளக்கமளித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இந்திய அணியின் பேட்ஸ்விமன்கள் தொடர்ந்து பேட்டிங்கில் கோட்டை விடுகின்றனர் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் தோல்வியுற்றதால் இந்திய அணி வெறும் வெள்ளிப்பதக்கத்தை மட்டுமே வென்றது.

162 ரன்னை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தபோதும் அதை எடுக்கமுடியாமல் சென்றதால் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலியா தட்டிச் சென்றுள்ளது.

இது போன்று முக்கியப் போட்டிகளின் இறுதியாட்டத்தில் இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து மோசமாக விளையாடுவதாலும் ஒரேமாதிரியான தவறுகளைச் செய்வதாலும் இவ்வாறு நடக்கிறது. இது மூன்றாவது முறையாகும் என்று ஹர்மன்பிரீத் கௌர் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இதுபோன்ற தவறுகளை நிறுத்த வேண்டும் என்றும் இந்திய அணியினர் தங்களது திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் கௌர் வலியுறுத்தினார்.

லீக் போட்டிகளில் இதுபோன்ற தவறுகள் நடக்கவில்லை. ஆனால் இறுதியாட்டத்தில் நடைபெறுவதைப் பார்த்தால் வீராங்கனைகள் மனத்தளவில் ஏதோவொரு முட்டுக்கட்டை இருப்பதாகத் தெரிகிறது.

கடைசி 6 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் அணியின் பலம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் அடுத்து 13 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழுந்து பரிதாபமாக தோற்றது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி