தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Commonwealth Games 2022: ட்ரிபிள் ஜம்பில் எல்தோஸ் பால் தங்கம், அப்துல்லா வெள்ளி

Commonwealth Games 2022: ட்ரிபிள் ஜம்பில் எல்தோஸ் பால் தங்கம், அப்துல்லா வெள்ளி

I Jayachandran HT Tamil

Aug 08, 2022, 04:22 PM IST

22ஆவது காமன்வெல்த் போட்டியில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய வீரர் எல்தோஸ் பால் தங்கப்பதக்கத்தையும், அப்துல்லா அபுபெக்கர் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
22ஆவது காமன்வெல்த் போட்டியில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய வீரர் எல்தோஸ் பால் தங்கப்பதக்கத்தையும், அப்துல்லா அபுபெக்கர் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

22ஆவது காமன்வெல்த் போட்டியில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய வீரர் எல்தோஸ் பால் தங்கப்பதக்கத்தையும், அப்துல்லா அபுபெக்கர் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பெர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாளில் நடைபெற்ற ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் எல்தோஸ் பால் தங்கப்பதக்கத்தையும், அப்துல்லா அபுபெக்கர் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமையைச் சேர்த்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப் பதக்கம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்தப் போட்டியில் எல்தோஸ் பால் 17.03 மீட்டர் தொலைவு தாண்டி தங்கத்தை வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக இந்திய வீரர் அப்துல்லா அபுபெக்கர் 17.02 மீட்டர் தொலைவு தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான எல்தோஸ் பால் இந்தப் போட்டியில் புதிய வரலாறைப் படைத்துள்ளார்.

பதக்கங்களை வென்ற மகிழ்ச்சியில் எல்தோஸ் பாலும், அப்துல்லா அபுபக்கரும் போட்டி நடந்த அலெக்ஸாண்டர் மைதானத்தை தேசியக் கொடியை ஏந்தியபடி வெற்றி வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியை அளித்தது.

மைதானத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் அவர்கள் பெருத்த கரகோஷத்தை எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.

எல்தோஸ் பால் பெற்ற தங்கத்தின் மூலம் இந்திய தடகள அணியின் முதல் வெற்றியை நாட்டியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயமடைந்த காரணத்தால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் எல்தோஸ் பால் மற்றும் அப்துல்லா அபுபெக்கரின் சாதனை மிகுந்த ஆறுதலை அளித்துள்ளது என்று இந்திய ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னதாக 1970ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ட்ரிபிள் ஜம்பில் மொகிந்தர் சிங் கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து 1974ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடி மொகிந்தர் சிங் கில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

2010ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ரெஞ்சித் மகேஸ்வரி ட்ரிபிள் ஜம்பில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அர்பிந்தர் சிங் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

அடுத்த செய்தி