தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: மல்யுத்த போட்டியில் பாக். வீரரை வீழ்த்தி தங்கம் வென்ற தீபக் புனியா

CWG 2022: மல்யுத்த போட்டியில் பாக். வீரரை வீழ்த்தி தங்கம் வென்ற தீபக் புனியா

Aug 06, 2022, 12:33 PM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 86 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வீரர் முகமத் இனாம் என்பவரை இந்தியாவின் தீபக் புனியா வீழ்த்தி தங்கம் வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 86 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வீரர் முகமத் இனாம் என்பவரை இந்தியாவின் தீபக் புனியா வீழ்த்தி தங்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 86 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வீரர் முகமத் இனாம் என்பவரை இந்தியாவின் தீபக் புனியா வீழ்த்தி தங்கம் வென்றார்.

பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 86 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் பாகிஸ்தான் வீரர் முகமது இனாம் என்பவரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார் இந்திய வீரர் தீபக் புனியா. இது காமன்வெல்த் போட்டிகளில் இவர் பெறும் முதல் பதக்கமாக அமைந்தது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

அத்துடன் இந்த்தொடரில் இந்தியா பெறும் 9வது தங்க பதக்கமாக உள்ளது. இதற்கு முன்னதாக மல்யுத்த போட்டிகள் ஆண்கள் பிரிவில் பஜ்ரங் புனியா, பெண்கள் பிரிவில் சாக்‌ஷி மாலிக், அன்ஷு மாலிக் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வீரர் இனாம், தீபக் புனியாவுக்கு கடுமையான நெருக்கடி அளித்தார். ஒரு கட்டத்தில் 2-0 என்று இந்தியா முன்னிலை பெற்றிருந்தபோதிலும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் அவர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இனாம் - தீபக் என இருவரும் ஆட்டம் முழுவதும் சிறப்பாக தடுப்பு ஆட்டத்தை கையாண்டனர்.

தீபக் புனியா தனது பிரிவு ஆட்டத்தில் முதலில் நியூசிலாந்து வீரர் மாத்யூ ஆக்சன்ஹாம் என்பவருடன் மோதி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். பின் மேற்கு ஆப்பரிக்க நாடான சியரா லியோனை சேர்ந்த ஷேகு கசெக்பாமாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் வெற்றியை கண்டார். அரையிறுதியில் கனடா வீரர் அலெக்சாண்டர் மூர் என்பவரை வீழ்த்தினார்.

இதையடுத்து இறுதிக்குள் நுழைந்த அவர் பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த தொடரில் இந்திய ஒரேயொரு வெள்ளிப்பதக்கம் வென்றது. அந்தப் பதக்கத்தை பெற்றவர் தீபக் புனியா. இந்த தனித்துவமான ஆட்டத்தினால் கவனம் பெற்ற அவர், 2019 உலக ஜூனியர் சாம்பின் தொடரில் 86 கிலோ எடைப்பிரிவில் தேர்வாகி சீனியர் வீரர்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதன்மூலம் 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் இரண்டு ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்களில் வெள்ளிபதக்கமும், 2019, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் வெண்கல பதக்கமும் வென்றார்.

அடுத்த செய்தி