தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: இலங்கை அணியிலிருந்து மாயமான 10 பேர்! இங்கிலாந்திலேயே தங்கிவிட திட்டம்?

CWG 2022: இலங்கை அணியிலிருந்து மாயமான 10 பேர்! இங்கிலாந்திலேயே தங்கிவிட திட்டம்?

Aug 08, 2022, 04:40 PM IST

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை குழுவிலிருந்து 10 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 9 வீரர்கள் மற்றும் 1 அலுவலர் உள்பட 10 பேர் தொடர்பில் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை குழுவிலிருந்து 10 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 9 வீரர்கள் மற்றும் 1 அலுவலர் உள்பட 10 பேர் தொடர்பில் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை குழுவிலிருந்து 10 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 9 வீரர்கள் மற்றும் 1 அலுவலர் உள்பட 10 பேர் தொடர்பில் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை குழுவை சேர்ந்த 10 பேர் காணாமல் போயிருப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. தங்களுக்கான போட்டிகள் முடிந்தவுடன் குழுவில் சேராமல் அவர் தொடர்பில் இல்லாமல் இருப்பதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

குத்துசண்டை ஷனித் சதுரங்கா, ஜூடோ வீராங்கனை சமிலா திலானி, அவரது மேலாளர் அசேலா டி சில்வா ஆகியோர் கடந்த வாரமே காணமல் போயுள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது மேலும் 7 பேர் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. அவர்கள் இங்கிலாந்தில் இருக்க திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் இங்கே இருந்தவாறே புதிய வேலையை தேடிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடலாம் என சந்தேகிப்பதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வீரர்கள் மீண்டும் நாடு திரும்புவதை உறுதி செய்யும் விதமாக அனைவரின் பாஸ்போர்களும் அந்த அணியை சேர்ந்து குழுவின் நிர்வாகிகள் வாங்கி வைத்திருந்தனர். இருப்பினும் சிலர் குழுவிலிருந்து வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.

இதற்கிடையே கடந்த வாரம் காணமல் போன மூன்று பேர் இருக்கும் இடத்தை இங்கிலாந்து போலீசார் கண்டறிந்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களிடம் 6 மாத காலம் செல்லுபடியாகும் என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அணி நிர்வாகத்திடம் இருந்த பாஸ்போர்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலை போலீசார் கூறவில்லை என இலங்கை குழுவை சேர்ந்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று வெளிநாடுகளில் நடைபெற்று விளையாட்டு தொடர்களுக்கு செல்லும் இலங்கை அணிகளிலிருந்து வீரர்கள், அலுவலர்கள் காணாமல்போவதென்பது சமீப காலமாக தொடர்கதையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஓஸ்லோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கை மல்யுத்த அணியின் மேலாளர் காணாமல் போயுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது காமன்வெல்த் தொடரில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

அடுத்த செய்தி