தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  2023 Men Hockey World Cup: உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா போட்டிகளின் அட்டவணை

2023 Men Hockey World Cup: உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா போட்டிகளின் அட்டவணை

Sep 28, 2022, 02:35 PM IST

ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியா, ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.
ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியா, ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியா, ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 15வது ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறுகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Olympic: ‘நாங்கள் நேரத்தை மேம்படுத்த வேண்டும்’: இந்திய ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே குழு பிளேயர் ராஜீவ் ஆரோக்கியா

இதையடுத்து நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும் போட்டியில் இந்தியா அணி குரூப் டி பிரிவில் இம்பிடித்துள்ளது. இந்தப் பிரிவில்தான் வலுவான அணிகளான ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.

இதைத்தொடந்து உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை வரும் ஜனவரி 13ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது ரூர்கேலா நகரில் நடைபெறுகிறது.

பின்னர் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை ஜனவரி 15ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியும் ரூர்கேலாவில் நடைபெறுகிறது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜனவரி 19ஆம் தேதி புவனேஷ்வரில் வைத்து வேல்ஸ் அணியுடன் இந்தியா மோதுகிறது. \

இந்தியா விளையாடும் அனைத்து லீக் ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

அடுத்த செய்தி