தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tamil Livenews Updates: ஆப்கனை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
Tamil Live News Updates: இன்றைய (18.10.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (18.10.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil LiveNews Updates: ஆப்கனை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

Oct 18, 2023, 09:48 PM IST

Tamil Live News Updates: இன்றைய (18.10.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Oct 18, 2023, 09:57 PM IST

அதிமுக தலைமையில் கூட்டணி அமையும்

அதிமுக தலைமையில் நாடாளுமன்றத்தில் சிறப்பான கூட்டணி அமைக்கப்பட்டு வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு 

Oct 18, 2023, 09:48 PM IST

தேசிய கட்சிகள் துரும்பாக பார்க்கின்றனர்

இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்று முதலமைச்சர் ஸ்டாலினால் சொல்ல முடிந்ததா?, மாறி மாறி ஆட்சிக்கு வரும் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டு மக்களை பற்றி கண்டுகொள்வதில்லை. நம்மை ஒரு துரும்பாகத்தான் பார்க்கிறார்கள் - ஈபிஎஸ்

Oct 18, 2023, 09:32 PM IST

துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை - ஈபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டை ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் ரிப்பன் வெட்டுகிறார் - எடப்பாடி பழனிசாமி 

Oct 18, 2023, 09:10 PM IST

ஆப்கனை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி

Oct 18, 2023, 09:05 PM IST

அதிமுகதான் காரணம்

இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது என்று சொன்னால் அதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் - எடப்பாடி பழனிசாமி 

Oct 18, 2023, 08:55 PM IST

உதயநிதி ஆலோசனை

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

Oct 18, 2023, 08:39 PM IST

மருது பாண்டியர் குருபூஜை - கல்லூர்களுக்கு விடுமுறை

மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம் தேதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு

Oct 18, 2023, 08:20 PM IST

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா - நாளை தீர்ப்பு

senthilBalaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் 

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

Oct 18, 2023, 08:00 PM IST

நம்மை துரும்பாக பார்க்கின்றனர்

தேசிய கட்சிகள் நம்மை துரும்பாக பார்க்கிறார்கள் என சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

Oct 18, 2023, 07:35 PM IST

லியோ டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு

Leo FDFS:சென்னை ரோகிணி திஏட்டரில் லியோ படத்திற்கு டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு

Oct 18, 2023, 07:19 PM IST

போர் தீர்வு அல்ல - போப் ஆண்டவர்

Israel war: எந்த பிரச்னைக்கும் போரும், வன்முறையும் தீர்வாகாது; அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே விதைக்கிறது, வெறுப்பை அதிகரிக்கிறது. பழிவாங்கலை பெருக்குகிறது மற்றும் எதிர்க்காலத்தை அழிக்கிறது- இஸ்ரேல் போர் குறித்து போப் பிரான்சிஸ் கருத்து

Oct 18, 2023, 07:02 PM IST

பல்பிடுங்கப்பட்ட சம்பவம் - அரசு பதில் 

தென்காசியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லை - நீதிமன்றத்தில் அரசு பதில் 

Oct 18, 2023, 06:46 PM IST

புதுக்கோட்டையில் 99 பேருக்கு டெங்கு 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 99 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி 

Oct 18, 2023, 06:35 PM IST

25 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை ரயில்வே இருப்பு பாதை அருகே 25 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்

Oct 18, 2023, 06:26 PM IST

சிவகாசி பட்டாசு விபத்து - கமல்ஹாசன் ட்வீட்

சிவகாசி கிச்சநாயக்கன்பட்டியிலும் மங்களம் கிராமத்திலும் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான வரன்முறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்னும் ஆய்வில், தொடர்புடைய அதிகாரிகள் கடுமை கூட்ட வேண்டும்.

Oct 18, 2023, 06:16 PM IST

ரோகிணியில் லியோ வெளியாகும் என அறிவிப்பு

Leo: சென்னை ரோகிணி திரையரங்கம் உட்பட சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் லியோ திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு

Oct 18, 2023, 06:06 PM IST

121 தமிழர்கள் இந்தியா வருகை

இதுவரை, இஸ்ரேலில் இருந்து 121  தமிழ்நாடு அரசின் செலவிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.

Oct 18, 2023, 06:05 PM IST

 அடவிநயினார்கோவில் நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தினை கருத்தில் கொண்டு, அடவிநயினார்கோவில் பாசனம் - மேட்டுக்கால், கரிசல்கால் பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன் கால், சாம்பவர் வடகரை கால்வாய் மற்றும் இரட்டைகுளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடி செய்வதற்கு அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 19.10.2023 முதல் 16.03.2024 வரை 150 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் பாசனபருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 955.39 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் 7643.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Oct 18, 2023, 05:50 PM IST

பாலியல் வன்கொடுமை - ராமதாஸ் கண்டன்ம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அவருடன் பயிலும் மாணவர்களால் மயக்க மருந்து கொடுத்து, கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கஞ்சா போதையில் இக்கொடுமையை அரங்கேற்றிய மனித மிருகங்கள் இதுவரை கைது செய்யப்படாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

Oct 18, 2023, 05:17 PM IST

கிறிஸ்தவ முன்னணி தலைவர் கைது

சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் சரவணன் ஜோசப் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Oct 18, 2023, 05:17 PM IST

ஆடியோ லாஞ்ச் இல்லை ஏன்?

Leo: ஆடியோ லாஞ்ச் நடைபெறாததற்கு காரணத்தை நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ப்ரீ பாஸ் என்றால் எப்படி அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். நாளை ஏதாவது பிரச்னை என்றால் அது படத்திற்கு எதிர்மறையாகிவிடும். அதனால்தான் ஆடியோ லாஞ்ச் இல்லாமல் போக காரணம். இன்றைக்கு தேதிக்கு இந்த படத்திற்கான விளம்பரம் போதும் என்று நினைக்கிறேன் -லோகேஷ் கனகராஜ் 

Oct 18, 2023, 04:57 PM IST

ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்

காசா மருத்துவமனை தாக்குதலுக்கு ஹமாஸ் தான் காரணம் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்

Oct 18, 2023, 04:38 PM IST

லியோ எப்படி இருக்கும் - லோகேஷ் கனகராஜ் பதில்

Leo: "எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும், படத்தில் முடிவில் அனைத்தும் விஜய்யின் தோளில் இருக்கும்" - லோகேஷ் கனகராஜ், இயக்குநர்

Oct 18, 2023, 04:36 PM IST

விஜய் படம் என்றாலே ஏதாவது பிரச்னை வருகிறது- லோகேஷ் கனகராஜ் 

Leo: விஜய் படம் என்றாலே ஏதாவது பிரச்னை இருந்து வருகிறது. யாரோ ஒருத்தருக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டிருக்கும். உதாரணமாக ட்ரைலரில் வந்த கெட்டவார்த்தை அவ்வுளவு பெரிய பிரச்னையாக மாறியது. விமர்சனங்கள் வந்த உடனே அதை எடுத்துவிட்டோம். அவர் படங்களுக்கு இது நடக்கிறது.

கெட்டவார்த்தைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் காண்பித்து என்ன சந்தோஷத்தை அனுபவிக்கப்போகிறோம் என்பதல்ல, அந்த வார்த்தையை பேசியது நடிகர் விஜய் அல்ல; அந்த கதாப்பாத்திரம் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 

Oct 18, 2023, 04:02 PM IST

கொசு அடிப்பதே வேலையாக உள்ளது - வானதி சீனிவாசன் 

BJP: என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ளே சென்றால் முதல் 10 நிமிடம் கொசு அடிப்பதே வேலையாக உள்ளது. மக்கள் நலன் என்பது பின்னுக்கு தள்ளப்பட்டு ஆளுங்கட்சியினர் எப்படி சுயநலமாக ஆதாயம் அடையளாம் என்பதே நோக்கமாக உள்ளது - வானதி சீனிவாசன் 

Oct 18, 2023, 03:46 PM IST

நியூசிலாந்து வீரர் வில் யங் அரைசதம்

Worldcup: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அரை சதம் அடித்தார் நியூசிலாந்து வீரர் வில் யங்

Oct 18, 2023, 03:36 PM IST

’லியோவை கர்நாடகாவில் திரையிடவிடமாட்டோம்’

Leo: தமிழ்நாடு காவிரி தண்ணீரை கேட்டா ’லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம்- வாட்டாள் நாகராஜ்

Oct 18, 2023, 03:36 PM IST

புதுச்சேரியிலும் காலை 9 மணிக்கு லியோ ரிலீஸ்

Leo: புதுச்சேரி மாநிலத்திலும் காலை 9 மனிக்கு மேல் லியோ திரைப்படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு

Oct 18, 2023, 03:13 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Oct 18, 2023, 03:02 PM IST

மின் கட்டண குறைப்பு - எந்த பயனும் இல்லை 

PMK: தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8 ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் எதிர்பார்ப்புகளில் சிறிய அளவைக் கூட நிறைவேற்றாத இந்த அறிவிப்பால் எந்த பயனும் இல்லை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Oct 18, 2023, 02:52 PM IST

ஹமாஸ் நாஜி படையாக மாறி உள்ளது

Israel War: ஹமாஸ் படையினர் தற்ஓதைய ஜாஜிபடையினராக மாரிறி உள்ளனர் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து

Oct 18, 2023, 02:41 PM IST

3 மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை 

RSS Rally: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Oct 18, 2023, 02:32 PM IST

இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை செய்வோம் - ஜோ பைடன்

Israel War: இஸ்ரேலுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அத்தனையும் செய்து தருவோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Oct 18, 2023, 02:05 PM IST

இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த வேண்டும் - முதல்வர்

Isreal War: போர் என்பதே கொடூரமானது, இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

Oct 18, 2023, 01:55 PM IST

அல் உம்மா தலைவருக்கு இடைக்கால ஜாமீன்

Madras High Court: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்னை விதிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு இடைக்கால ஜாமீன்

Oct 18, 2023, 01:53 PM IST

ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு

worldcup: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு

Oct 18, 2023, 02:05 PM IST

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு

ED Raid: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொற்றலை ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ஆய்வு

Oct 18, 2023, 01:33 PM IST

நாவலூர் சுங்கசாவடியில் பணம் வசூலிக்கப்படாது

TollPlaza: நாளை முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிப்பு 

Oct 18, 2023, 12:41 PM IST

பாலஸ்தீன தூதர் தகவல்

Israel-Hamas war: காஸா மருத்துவமனை மீதான ராக்கெட் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் எனவும் தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்துள்ளார்.

Oct 18, 2023, 12:32 PM IST

ராமதாஸ் கண்டனம்

Ramadoss Statement: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Oct 18, 2023, 12:29 PM IST

கப்பல் சேவை திடீர் நிறுத்தம்

Nagai - Sri Lanka: நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Oct 18, 2023, 12:11 PM IST

ராகுல் காந்தி சாடல்

Rahul Gandhi: இந்திய தொழிலதிபர் அதானிக்கு, பிரதமர் நரேந்திர மோடி கையொப்பமிட்டு பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

Oct 18, 2023, 12:06 PM IST

சென்னை ரோகிணி திரையரங்கில் ‘லியோ' திரையிடப்படாது"

Rohini Theater: விநியோகஸ்தர்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் சென்னை ரோகிணி திரையரங்கில் 'லியோ' திரைப்படம் திரையிடப்படாது என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Oct 18, 2023, 11:39 AM IST

4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

CM MK Stalin: 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து 2ஆவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறைமலைநகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Oct 18, 2023, 11:31 AM IST

'லியோ' இணையதளங்களில் வெளியிட தடை

LEO: 'லியோ' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

Oct 18, 2023, 11:26 AM IST

ஹமாஸ் அமைப்பு நிபந்தனை

Israel-Hamas war: காஸா மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதலை நிறுத்தினால், பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிணைக்கைதிகளை விடுவிக்க முன்வந்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், காசா பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை நிறுத்தினால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பயங்கரவாதிகளை விடுவிப்போம் எனக்கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

Oct 18, 2023, 10:55 AM IST

தீபாவளி பண்டிகை - ஆலோசனை கூட்டம்

Special Buses: பாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாகப் போக்குவரத்துத் தலைமையில் வரும் 28ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Oct 18, 2023, 10:47 AM IST

சபரிமலையில் மேல் சாந்திக்கான தேர்வு

Sabarimala Temple: சபரிமலை சன்னிதானம் மேல் சாந்தியாக ஸ்ரீ மகேஷ் நம்பூ திரியும் மாளிகைபுரம் மேல் சாந்தியாக ஸ்ரீ முரளி கிருஷ்ணன் நம்பூ திரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

Oct 18, 2023, 10:22 AM IST

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்

Fishermen Attacked: கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

Oct 18, 2023, 10:10 AM IST

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.78000-க்கு விற்பனையாகிறது.

Oct 18, 2023, 10:00 AM IST

லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது

LEO First Show: வரும் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அரசாணை வெளியிட்ட படி 9 மணியில் இருந்து இரவு 1.30 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Oct 18, 2023, 09:40 AM IST

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - 3 பேர் கைது

Fire Accident: விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் சுந்தரமூர்த்தி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Oct 18, 2023, 09:24 AM IST

மத்திய அரசு தகவல்

Vishwakarma Scheme: தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் பயன்பெற இதுவரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Oct 18, 2023, 09:06 AM IST

மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து

Ooty Train: கல்லார் அருகே பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால், காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்ற மலை ரயில் கல்லார் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பாறையை அப்புறப்படுத்தும் பணி தாமதமாகும் என்பதால் ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே புறப்பட்டது.

Oct 18, 2023, 09:00 AM IST

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Weather Update: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அக்டோபர் 20ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு. 21ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Oct 18, 2023, 08:41 AM IST

இன்றைய வானிலை  நிலவரம்

Weather update: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக். 18) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Oct 18, 2023, 08:22 AM IST

ஐய்யப்ப பக்தர்கள் பேருந்து விபத்து

Accident: கர்நாடக, கோலாரில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் பேருந்து எருமேலி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Oct 18, 2023, 08:02 AM IST

பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

Warning: தமிழகத்தில், டெங்கு, மலேரியா, டைபாய்டு, எலிக் காய்ச்சல், நிமோனியா, பூச்சிக்கடியால் உருவாகக் கூடிய ஸ்க்ரப் டைபஸ் உள்ளிட்ட காய்ச்சல் வகைகளை பரப்பும், 60க்கும் மேற்பட்ட வைரஸ் பாக்டீரியா பாதிப்புகள் உள்ளன. இந்த பாதிப்புகள் மூன்று மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என பொது சுகதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

Oct 18, 2023, 07:50 AM IST

ஐடி ரெய்டு

IT Raids: சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான ஆயிரம் விளக்கு, எழும்பூர், தாம்பரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Oct 18, 2023, 07:50 AM IST

வங்கியில் திருட்டு முயற்சி

Tiruvallur: திருவள்ளூர், பாலவாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து, மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றும் லாக்கரை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி மேலாளர் வைத்தியநாதன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர்.

Oct 18, 2023, 07:50 AM IST

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

Lake Level: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2495 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 512 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 464 மில்லியன் கன அடியாக உள்ளது.

Oct 18, 2023, 07:49 AM IST

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Chennai: சென்னையில் இன்று (அக்.18) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 515வது நாளாக விலை மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பகிர்வு கட்டுரை