தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fairness Cream Kidney Failure : சரும அழகு கிரீம்களால் சிறுநீரக பிரச்சனைகள் அபாயம்.. ஆய்வில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

Fairness Cream Kidney Failure : சரும அழகு கிரீம்களால் சிறுநீரக பிரச்சனைகள் அபாயம்.. ஆய்வில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

Apr 17, 2024, 12:54 PM IST

Fairness Cream Kidney Failure : பேஸ் க்ரீம்களை தடவுவதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் அழகுக்கு பயன்படுத்தி வரும் ஃபேஸ் க்ரீமுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்.
Fairness Cream Kidney Failure : பேஸ் க்ரீம்களை தடவுவதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் அழகுக்கு பயன்படுத்தி வரும் ஃபேஸ் க்ரீமுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்.

Fairness Cream Kidney Failure : பேஸ் க்ரீம்களை தடவுவதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் அழகுக்கு பயன்படுத்தி வரும் ஃபேஸ் க்ரீமுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்.

Fairness Cream Kidney Failure : பொதுவாக ஆண்களும் பெண்களும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள அழகுசாதனப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதற்காக எந்த அளவுக்கும் பணமும் நேரமும் செலவு செய்ய தயாராக உள்ளனர். சன் க்ரீம், ஸ்கின் க்ரீம், ஃபவுண்டேஷன், மாய்சரைசர் எனப் பல்வேறு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி உங்களை அழகாக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர். ஒரு அதிர்ச்சியூட்டும் ஆய்வு இந்த அழகு சாதனப் பொருட்களின் பின்னால் உள்ள ஆபத்தை வெளிப்படுத்துகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் செயற்கையான முறையில் பல்வேறு வேதிப்பொருட்களால் தான் தயாரிக்க படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Sleeping Tips : தூக்கமின்மையால் அவதியா.. ஆழ்ந்த தூக்கத்திற்கு இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்

Benefits of Walking : சாப்பிட்டவுடன் ஹாயாக ஒரு வாக்! என்னென்ன நன்மைகளை தருகிறது பாருங்கள்!

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

இதே மாதிரி புழக்கத்தில் இருக்கும் பல்வேறு ஃபேஸ் க்ரீம்கள் இப்போது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கி வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த க்ரீம்களை தடவுவதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிய வருகிறது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் அழகுக்கு பயன்படுத்தி வரும் ஃபேஸ் க்ரீமுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இங்கே ஒரு இணைப்பு நமக்கு பல்வேறு விசயங்களை சொல்வதாக உள்ளது.

ஆய்வின் படி, சரும கிரீம்களை அதிகமாக பயன்படுத்துவதால், சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அந்த கிரீம்களில் பாதரசம் அதிகம். இது தோல் மூலம் உடலில் உள்ள பாகங்களுக்கு ஊடுருவ சாத்தியம் ஆகிறது. இது சிறுநீரகத்தை சேதப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், சிறுநீரகத்தை பாதிக்கும் சவ்வு நெப்ரோபதியும் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.

சவ்வு நெஃப்ரோபதி ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இதனால் சிறுநீரகங்கள் செயலிழந்து, சிறுநீரில் அதிகப்படியான புரதம் வெளியேறுகிறது. சவ்வு நெப்ரோபதியால் பாதிக்கப்பட்ட 22 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 15 பேர் அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 13 பேர் தோல் அழகுக்கான கிரீம்களைப் பயன்படுத்திய பின்னரே அறிகுறிகளை உருவாக்கினர்.

இதே நிலை நீடித்தால், பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு ஆபத்துகளும் அழகு சாதனப் பொருட்களில் மறைந்திருப்பதால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிட்னி இன்டர்நேஷனல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக அளவு பாதரசம் கொண்ட தோல் ஃபேர்னஸ் க்ரீம்களின் பயன்பாடு அதிகரிப்பது சவ்வு நெஃப்ரோபதி (எம்என்) நிகழ்வுகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இந்தியாவில் ஸ்கின் ஃபேர்னஸ் க்ரீம்களின் பரவலான பயன்பாடு சிறுநீரக பிரச்சனைகளை அதிகரிக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது இந்த கிரீம்களில் பாதரசம் அதிகமாக உள்ளது, இது சிறுநீரக பிரச்சனைகளுக்கு ஒரு மௌனமான காரணம் என்று அறிக்கை கூறுகிறது.

இது தோல் மற்றும் சிறுநீரக ஆரோக்கிய பிரச்சனை மட்டுமல்ல.. பொது சுகாதார நெருக்கடி என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாதரசத்தை சருமத்தில் தடவினால் அது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் உள்ள கட்டுப்பாடற்ற விளம்பர சந்தையே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம். 

மக்கள் மத்தியில் விளம்பர படங்களில் தோன்றும் மாயங்களை நம்பி உடனே அழகாக முடியும் என்று நம்புகின்றனர். இவைகளை பயன்படுத்தி கொள்ளும் போது தான் தங்களது சருமத்தை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையும் உருவாகி இருக்கிறது. மக்களும் இயற்கை முறையில் கிடைக்கும் பல பொருட்களை பயன்படுத்தி கொள்ளும் முயற்சி குறைந்து விட்டது. தயார் நிலையில் உள்ள பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி