தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Reasons For Weight Gain : மூச்சு முட்ட சாப்பிடுவது மட்டுமல்ல; இந்த பழக்கங்களும் உடல் எடை அதிகரிக்க காரணம்!

Reasons for Weight Gain : மூச்சு முட்ட சாப்பிடுவது மட்டுமல்ல; இந்த பழக்கங்களும் உடல் எடை அதிகரிக்க காரணம்!

Priyadarshini R HT Tamil

Mar 11, 2024, 03:51 PM IST

Reasons for weight gain : உடல் எடை அதிகரிக்க அதிகமாக உணவு உட்கொள்வது மட்டும் காரணமல்ல, பல தேவையற்ற பழக்கவழக்கங்களும்தான்.
Reasons for weight gain : உடல் எடை அதிகரிக்க அதிகமாக உணவு உட்கொள்வது மட்டும் காரணமல்ல, பல தேவையற்ற பழக்கவழக்கங்களும்தான்.

Reasons for weight gain : உடல் எடை அதிகரிக்க அதிகமாக உணவு உட்கொள்வது மட்டும் காரணமல்ல, பல தேவையற்ற பழக்கவழக்கங்களும்தான்.

நாம் உடல் எடையை எப்போதும் உணவுடன்தான் சேர்த்து பார்க்கிறோம். ஆனால், அங்கு தான் நாம் தவறிழைக்கிறோம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Health Alert : பேக்கிங் உணவுகளால் உயரும் சர்க்கரை அளவு.. அதிகரிக்கும் குழந்தைகளின் உடல் எடை!

Fatty Liver in Diabetics: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை.. நீரிழிவு மற்றும் உடல் பருமன் வரை.. இந்த விஷயத்தில் கவனம் தேவை!

புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?

Garlic Peel : இந்த விஷயம் தெரிஞ்சா இனி பூண்டு தோலை கீழ போட மாட்டீங்க.. நீங்கள் இழக்கும் சத்துக்கள் எவ்வளவு தெரியுமா?

நாம் அதிகம் சாப்பிடுவதால் வருவதல்ல உடல் எடை அதிகரிப்பு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றினாலும் உங்களின் உடல் எடை அதிகரிக்கும். அது உணவைவிட முக்கியத்துவம் பெறும் காரணங்களாகும். உடல் பருமனுக்கு காரணமாக, நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய மற்ற விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

உட்கார்ந்த இடத்தில் வேலை

உடல் செயல்பாடுகள் குறைந்து, உங்கார்ந்த இடத்தில் வேலை செய்ய வேண்டிய நிலை பலருக்கு உள்ளது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் குறைந்து உடலில் எடை அதிகரிக்கிறது. எனவே உட்கார்ந்த இடத்திலே வேலை செய்பவர்கள் கட்டாயம், தினமும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அது உங்கள் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை குறைத்து, ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

முறையற்ற உறக்க பழக்கம்

போதிய உறக்கமின்மை ஹார்மோன்கள் சமநிலையை பாதிக்கிறது. இதனால் அதிக பசி, சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றி அதிக கலோரிகள் கொண்ட உணவை நாடச்செய்து, உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. எனவே தரமான உறக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் எடையை பராமரிப்பதில் தரமான உறக்கம் மிகவும் அவசியம்.

மனஅழுத்தத்தால் சாப்பிடுவது அதிகரிப்பது

மனஅழுத்தத்தால் சாப்படுவது அதிகரிக்கும். இதனால் நீங்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உட்கொள்கிறீர்கள். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது. எனவே தியானம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றை தேர்வு செய்து, உங்கள் மனஅழுத்தத்தை கையாண்டு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கப்பாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியாது.

அதிக சர்க்கரை எடுப்பது

அதிக சர்க்கரை நிறைந்த இனிப்புகள், பானங்களை அதிகம் உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கும். இவை உடலில் தேவையற்ற கலோரிகளை அதிகரிக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது இதனால் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு, அதிகம் சாப்பிட்டு, உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது.

அதிகம் அளவு

உணவில் அதிக அளவு சாப்பிடுவது, எடுத்துக்காட்டாக கடைகளில் விற்கப்படும் உணவுகளில் அதிகளவு வாங்கி சாப்பிடுவது. இதனால் உங்கள் உடலில் அதிக கலோரிகள் சேரும். எனவே கொஞ்ச அளவை சாப்பிட்டு, சாப்பிடும்போது கவனத்துடன் சாப்பிடுவதும், உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, அதில் சர்க்கரை மற்றும் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது உங்கள் உணவில் கலோரிகளை அதிகரிக்கிறது. எனவே பழங்கள், நட்ஸ்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்களை எடுத்துக்கொள்வது உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

கவனமின்றி சாப்பிடுவது

என்ன சாப்பிடுகிறாம் என்ற கவனமின்றி சாப்பிடுவது, குறிப்பாக டிவி பார்த்துக்கொண்டோ அல்லது பணி செய்துகொண்டோ கவனமின்றி சாப்பிடுவது, கணக்கு வழக்கின்றி, அதிகம் சாப்பிடுவதற்கு ஊக்குவிக்கிறது. எனவே என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு வாய் உணவையும் தேவையான அளவு எடுத்துக்கொள்வது நல்லது. அப்போது உடல் எடை அதிகரிக்காது.

உணவை தவிர்ப்பது

உணவை தவிர்ப்பதும் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. மேலும் அது பிறகு சாப்பிடும்போது அதிகம் சாப்பிடுவதையும் ஊக்குவிக்கிறது. எனவே உணவை தவிர்த்தல் கூடாது. சரிவிகித உணவை சரியான இடைவெளியில் அல்லது பசிக்கும்போது எடுத்துக்கொள்ள வேண்டும். இது அதிகளவில் உங்கள் உடலில் கலோரிகள் சேர்வதை தடுக்கிறது.

தண்ணீர் கலோரிகள்

அதிக கலோரிகள் கொண்ட பானங்களும், குறிப்பாக சோடா, இனிப்பு காபி பானங்களும், ஆல்கஹால் போன்றவையும் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. எனவே அதை தவிர்த்து தண்ணீர், மூலிகை டீ போன்ற கலோரிகள் குறைந்த பானங்களுக்கு மாற வேண்டும். இதனால் நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ளாதது

குறைவான அளவு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் எடுத்துக்கொள்ளாமல், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது. எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய எடை மேலாண்டை இரண்டுக்கும் வழிவகுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி