தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Peanut Ladies Finger Fry : ஆந்திரா வெண்டைக்காய் வேப்புட்டு – மணமணக்கும் வேர்க்கடலை மசாலா சேர்த்து செய்வது!

Peanut Ladies Finger Fry : ஆந்திரா வெண்டைக்காய் வேப்புட்டு – மணமணக்கும் வேர்க்கடலை மசாலா சேர்த்து செய்வது!

Priyadarshini R HT Tamil

Sep 19, 2023, 12:16 PM IST

Ladies Finger Fry : வெண்டைக்காய், வேர்க்கடலை மசாலாப்பொடி சேர்த்து செய்வது எப்படி?
Ladies Finger Fry : வெண்டைக்காய், வேர்க்கடலை மசாலாப்பொடி சேர்த்து செய்வது எப்படி?

Ladies Finger Fry : வெண்டைக்காய், வேர்க்கடலை மசாலாப்பொடி சேர்த்து செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 4 ஸ்பூன் (வறுத்தது)

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

Diabetes Care : சர்க்கரை நோயால் அவதியா? கோதுமைக்கு பதில் என்ன சாப்பிடலாம்? இதோ ஆலோசனை!

சீரகம் – அரை ஸ்பூன்

வர மிளகாய் – 2

(மேலே கொடுக்கப்பட்டுள்ளது மசாலாவுக்கு தேவையானது)

வெண்டைக்காய் – கால் கிலோ

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

பூண்டு – 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 1 கொத்து

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

வேர்க்கடலை, சீரகம், வரமிளகாய் சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வெண்டைக்காயை நன்றாக கழுவி வழக்கமான பொரியலுக்கு நறுக்குவதைவிட சிறிது பெரிய அளவில் நறுகிக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். மேலும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்றாக கிளறிவிடவேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து, வெண்டைக்காய் சுருண்டு வதங்கி வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை மசாலா பொடி சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவையான ஆந்திரா வெண்டைக்காய் வேப்புட்டு, வறுத்த கடலை மசாலாப்பொடி சேர்த்தது சாப்பிட தயாராகிவிட்டது.

இதை அனைத்து வெரைட்டி ரைஸ், மீல்ஸ் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

உங்கள் வீட்டில் சிறியளவில் விருந்து என்றால், அதற்கு மீல்ஸ்க்கு இதை செய்து பரிமாறலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி