தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bitter Guard Pickle : கொஞ்சம் கூட கசக்காது! குழந்தைகளும் விரும்புவார்கள்! இப்டி செய்ங்க பாவக்காய் ஊறுகாய்!

Bitter Guard Pickle : கொஞ்சம் கூட கசக்காது! குழந்தைகளும் விரும்புவார்கள்! இப்டி செய்ங்க பாவக்காய் ஊறுகாய்!

Priyadarshini R HT Tamil

Jul 18, 2023, 04:29 PM IST

Pavakai Pickle : புளி, பூண்டு, மிளகாய் பொடி, வெல்லம் சேர்ப்பதால், பாவக்காய் ஊறுகாய் கசக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி செஞ்சுதான் பாருங்களேன்.
Pavakai Pickle : புளி, பூண்டு, மிளகாய் பொடி, வெல்லம் சேர்ப்பதால், பாவக்காய் ஊறுகாய் கசக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி செஞ்சுதான் பாருங்களேன்.

Pavakai Pickle : புளி, பூண்டு, மிளகாய் பொடி, வெல்லம் சேர்ப்பதால், பாவக்காய் ஊறுகாய் கசக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி செஞ்சுதான் பாருங்களேன்.

பாவக்காய் இந்த பெயரை கேட்டாலே கசக்கும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும். பாவக்காயை கசப்பின்றி சமைத்து அதை குழந்தைகளை சாப்பிட வைப்பது பெரும் சவால்தான். இதில் கலோரிகள் குறைவு. ஆனால், சத்துக்கள் அதிகம். இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ஆகியவை உள்ளது. மேலும் வைட்டமின் சி, மெக்னீசியம், ஃபோலிக் அமிலம், ஜிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், இரும்பு, கால்சியம், பீட்டா கரோட்டின், நார்ச்சத்து என இத்தனை சத்துக்கள் நிறைந்த பாவக்காயைக் கண்டால் நாம் ஓடிவிடுவோம். பாவக்காய் நீரிழிவு நோய்க்கு எவ்வளவு எதிர் என்பது உங்களுக்கு சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

Diabetes Care : சர்க்கரை நோயால் அவதியா? கோதுமைக்கு பதில் என்ன சாப்பிடலாம்? இதோ ஆலோசனை!

தேவையான பொருட்கள்

பாவக்காய் – அரை கிலோ

எண்ணெய் – 100 மி.லி.

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 50 கிராம் அல்லது உங்களுக்கு தேவையான அளவு

பச்சை மிளகாய் – துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்

பூண்டு – 8 – 10 பல்

கறிவேப்பிலை – 2 கொத்து

கெட்டி புளிக்கரைசல் - கால் கப்

மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

பெருங்காயம் – கால் ஸ்பூன்

வெல்லம் – 2 ஸ்பூன்

செய்முறை

பாவக்காயை நன்றாக அலசி காய விடவேண்டும்.

நறுக்கி, விதைகளை நீக்கிவிட வேண்டும்.

இதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் பாவக்காயை போட்டு, அது வேகும் வரை வதக்க வேண்டும்.

அப்போது மஞ்சள் தூள், புளிக்கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து கலக்கி நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு, தனியாக மிளகாய பொடி தூவி கிளறவேண்டும். அதை நன்றாக ஆறவிட வேண்டும்.

எந்த ஊறுகாய்க்கும் அந்த ஊறுகாய் மூழ்குமளவு எண்ணெய் விட வேண்டும். அப்போதுதான் நாம் அதை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் பூஞ்ஜைபடராமல் பாதுகாக்கவும் எண்ணெய் தான் உதவுகிறது. எனவே எண்ணெய் போதியளவு இல்லையென்றால் எண்ணெயை காய்ந்நி ஊறுகாய் மேலே ஊறவிடவும்.

ஊறுகாயை எப்போதும் கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வைப்பது நல்லது. ஊறுகாயை தினமும் நன்றாக கிளறிவிட்டு, பாத்திரன் மீது வெள்ளை துணியை கட்டி வெயிலில் வைப்பது ஊறுகாய் நன்றாக ஊறுவதற்கும், பூஞ்ஜை படராமல் இருப்பதற்கும் உதவும் இயற்கை பிரிசர்வேசன் முறை.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி