தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Soup: உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்கும் மூலிகை சூப் செய்வது எப்படி?

Herbal Soup: உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்கும் மூலிகை சூப் செய்வது எப்படி?

Manigandan K T HT Tamil

Jul 23, 2023, 05:37 PM IST

பூண்டு, கீரை, வெற்றிலை, எலுமிச்சை, இஞ்சி, கிராம்பு உள்ளிட்டவை இந்த சூப்பில் சேர்க்கப்படுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை எளிதில் நீங்கும். (Freepik)
பூண்டு, கீரை, வெற்றிலை, எலுமிச்சை, இஞ்சி, கிராம்பு உள்ளிட்டவை இந்த சூப்பில் சேர்க்கப்படுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை எளிதில் நீங்கும்.

பூண்டு, கீரை, வெற்றிலை, எலுமிச்சை, இஞ்சி, கிராம்பு உள்ளிட்டவை இந்த சூப்பில் சேர்க்கப்படுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை எளிதில் நீங்கும்.

மாலை நேரத்தில் உடல் புத்துணர்ச்சிக்காக ஹெர்பல் சூப் சாப்பிடலாம். வாழைத்தண்டு சூப், வெஜிடபிள் சூப் உள்பட பல வகை சூப் உள்ளது. இதில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஹெர்பல் சூப் குறித்து பார்ப்போம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Tomato Rice : சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்! நாவின் சுவை அரும்புகளை தூண்டும் சுவைக்கு இப்படி செய்ங்க!

International Nurses Day 2024 : சர்வதேச செவிலியர் தின வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

Fruit Eating: இரவு உணவில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்ல யோசனையா.. ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

JK’s Philosophy : ’கடந்த கால சிந்தனை! எதிர்கால கவலையால் ஏற்படும் துன்பம்!’ ஜே.கே சொல்லும் வாழ்கை தத்துவம்!

ஹெர்பல் சூப்பில் நிறைந்துள்ள பயன்கள்:

  • சோர்வை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது.
  • செரிமானம் மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது.
  • மன அழுத்தத்தை குறைக்கிறது.
  • உடலுக்கு வலுவளித்து ஊட்டமளிக்கிறது.
  • உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்கும்.
  • புத்துணர்ச்சி அளிக்கும்.

இப்படி எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ள ஹெர்பல் சூப் செய்யத் தேவையான பொருட்கள் என்னென்ன என பார்ப்போம்.

புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, துளசி-தேவையான அளவு

பாலக்கீரை அல்லது முருங்கை கீரை- தேவையான அளவு

மிளகு, சீரகம் - கால் டீஸ்பூன்

வெற்றிலை- ஒன்று

எலுமிச்சை பழச்சாறு- தேவைக்கேற்ப

உப்பு- தேவையான அளவு

இஞ்சி, பூண்டு- 5 முதல் 6 விழுதுகள்

ஓமம்- ஒரு சிட்டிகை

சோள மாவு கரைசல்- சிறிதளவு

எப்படி செய்ய வேண்டும்?

ஒரு குக்கரில் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, துளசி, சீரகம், பாலக் கீரை அல்லது முருங்கை கீரை, வெற்றிலை, எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி மற்றும் பூண்டு, ஓமம், கிராம்பு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

அதன் பின் அதில் சோள மாவு கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அதை இறக்கி வடிகட்டி அந்த சூப்பை எடுத்து சூடாக பரிமாறவும். இதில் மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

பூண்டு, கீரை, வெற்றிலை, எலுமிச்சை, இஞ்சி, கிராம்பு உள்ளிட்டவை இந்த சூப்பில் சேர்க்கப்படுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை எளிதில் நீங்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி