தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nungu Benefits: மலச்சிக்கலை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நுங்கின் மருத்துவப் பயன்கள்

Nungu Benefits: மலச்சிக்கலை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நுங்கின் மருத்துவப் பயன்கள்

I Jayachandran HT Tamil

Jun 11, 2023, 05:15 PM IST

மலச்சிக்கலை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நுங்கின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மலச்சிக்கலை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நுங்கின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மலச்சிக்கலை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நுங்கின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது பனை நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Health Alert : பேக்கிங் உணவுகளால் உயரும் சர்க்கரை அளவு.. அதிகரிக்கும் குழந்தைகளின் உடல் எடை!

Fatty Liver in Diabetics: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை.. நீரிழிவு மற்றும் உடல் பருமன் வரை.. இந்த விஷயத்தில் கவனம் தேவை!

புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?

Garlic Peel : இந்த விஷயம் தெரிஞ்சா இனி பூண்டு தோலை கீழ போட மாட்டீங்க.. நீங்கள் இழக்கும் சத்துக்கள் எவ்வளவு தெரியுமா?

உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது.

இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

மருத்துவப் பயன்கள்:

நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.

நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

பனை நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.

பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டுக்குமே மருந்தாக பயன்படுகிறது.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.

கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

ரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.

நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.

நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.

பெரியோர்கள், இளம் நுங்கை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த நுங்கின் நீரை தடவினால் வியர்க்குரு மறையும்.

நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி