தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Annamalai Bjp: 'இது ஒரு பெரிய விஷயம் அல்ல.. எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியல'அண்ணாமலை அதிரடி

Annamalai BJP: 'இது ஒரு பெரிய விஷயம் அல்ல.. எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியல'அண்ணாமலை அதிரடி

Mar 29, 2024, 06:59 AM IST

Annamalai BJP: அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள் என்றார். மேலும் தனது தரப்பில் இருந்து இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம் என்றார்.
Annamalai BJP: அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள் என்றார். மேலும் தனது தரப்பில் இருந்து இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம் என்றார்.

Annamalai BJP: அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள் என்றார். மேலும் தனது தரப்பில் இருந்து இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம் என்றார்.

Annamalai BJP: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆராய்ந்து ஒரு வேட்பு மனுவை எடுத்துள்ளார்கள். இது ஒரு பெரிய விஷயம் அல்ல. எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’ராகுல் காந்தியின் வயதை விட குறைவான சீட்டுகளைதே காங்கிரஸ் வெல்லும்!’ பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு!

Fact Check: ‘பேஸ்புக் பயன்படுத்தினால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ராகுல் சொன்னாரா?’ உண்மை என்ன?

HT interview: ’தமிழ்நாட்டில் கணிசமான இடங்களை பிடிப்போம்!’ இந்துஸ்தான் டைம்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேக பேட்டி!

Modi's PM Tenure: ’மோடிக்கு ஓய்வா! 75 வயதுக்கு பிறகும் மோடிதான் பிரதமர்!’ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி!

கோவையில் நேற்று வேட்புமனு பரிசீலையின் போது பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மனுவில் பிழைகள் உள்ளதால் அதை நிராகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும் , கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதில் அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள் என்றார்.

மேலும் தனது தரப்பில் இருந்து இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம் என்றார். இதில்  சீரியல் நம்பர் 15 சீரியல் நம்பர் 27 எனவும், ஒன்று வந்து India Court fee மற்றும் Indian non judicial என தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுதே ஒரு குழப்பம் இருந்தது என தெரிவித்த அவர், ஒன்றை நிராகரித்தால் மற்றொன்று ஏற்றுக்கொள்வார்கள் என்று இரண்டையும் கொடுத்திருந்தோம் என்றார். அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆராய்ந்து ஒரு வேட்பு மனுவை எடுத்துள்ளார்கள். இது ஒரு பெரிய விஷயம் அல்ல எனவும், ஆனால் எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இது அனைத்து தேர்தல்களிலும் நடக்கும் ஒன்றுதான். வேட்புமனு பரிசீலனை செய்யும்பொழுது ஒரு அரசியல் கட்சி இவ்வாறு செய்யும் இந்த முறை கோவையில் உச்சபட்சமாக நிராகரித்தே ஆக வேண்டும் என்று சொல்லி தேர்தல் நடத்தும் அதிகாரிகளே விளக்கம் தர வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

எங்களைப் பொறுத்தவரை சீரியல் நம்பர் 15 மற்றும் 27 ஆகிய இரண்டையும் தாக்கல் செய்துள்ளோம். இன்று நம்முடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முதல் வேட்புமனுவை நான் தாக்கல் செய்தேன், இரண்டாவது வேட்பு மனுவை வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் எதிர்க்கட்சிகள் சொல்வது போல் நிராகரிக்க வேண்டிய காரணமும் இது இல்லை என்றார். நிராகரிக்க வேண்டும் என்றால் வேண்டுமென்றே ஒரு பொய்யான செய்தியை அவர்கள் கூறி இருக்க வேண்டும் தேர்தலைப் பொறுத்தவரை காரணம் சொல்லி இதனை நிராகரிப்பது ஒரு காரணம் இல்லை என்றார்.

இதை அரசியல் கட்சிகள் புரியாமல் பேசுகிறார்கள். கமா இல்லை, புள்ளியில்லை என்று சொன்னால் கூட நிராகரிக்க வேண்டிய காரணம் அது கிடையாது என்றார். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீங்கள் கேள்வி எழுப்பலாம். அனைத்து விவரங்களும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியும் எனவும் இதற்கு மேலும் ஏதேனும் விவரங்கள் தெரிய வேண்டுமென்றால் தேர்தல் அதிகாரிகளிடம் கேட்கலாம் எனவும் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

அடுத்த செய்தி