தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tipu Sultan Memorial Bulldozed: சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக திப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு - மகாராஷ்ட்ராவில் பரபரப்பு

Tipu Sultan Memorial Bulldozed: சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக திப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு - மகாராஷ்ட்ராவில் பரபரப்பு

Jun 10, 2023 10:12 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 10, 2023 10:12 PM IST
  • மகாராஷ்ட்ரா மாநிலம் துலே மாவட்டத்தில் 18ஆம் நூற்றாண்டில் மைசூர் பகுதியை ஆண்ட திப்பு சுல்தானுக்கு நினைவு ரவுண்டானா ஒன்று உள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லீம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான பரூக் அன்வர், சாலை சந்திப்பில் சட்டவிரோதமாக இந்த நினைவிடத்தை கட்டியிருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் இடித்துள்ளது. உள்ளூர் இந்து அமைப்பான பாஜக யுவ மோர்ச்சா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறுக்கு சாலையின் மத்திய பகுதியில் இது கட்டப்பட்டு இருப்பதால் பல்வேறு இந்து அமைப்புகள் தொடர் புகார்களை அளித்துள்ளன. மகராஷ்ட்ரா மாநிலம் கோலாப்பூர் பகுதியில் முஸ்லீம் ஆட்சியாளரான அவுரங்கசிப் பாராட்டு விதமாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திப்பு சுல்தாான் பற்றியும் புகழ் பாடும் விதமாக சில கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக ஜூன் 7ஆம் தேதி இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது திப்பு சுல்தான் நினைவாக கட்டப்பட்டிருக்கும் ரவுண்டானா இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More