தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Chithirai Festival: சித்திரை முதல் நாளையொட்டி பொன் ஏர் பூட்டும் திருவிழா!

Chithirai Festival: சித்திரை முதல் நாளையொட்டி பொன் ஏர் பூட்டும் திருவிழா!

Apr 15, 2024 03:44 PM IST Karthikeyan S
Apr 15, 2024 03:44 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேயுள்ள பிதப்புரம் கிராமத்தில் சித்திரை முதல் நாளையொட்டி பொன் ஏர் பூட்டும் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் விவசாய கருவிகள் மற்றும் டிராக்டர், காளை மாடுகளுக்கும் சந்தனம் குங்குமம் இட்டு மாலை அணிவித்து கிராம மக்கள் வழிபட்டனர். தொடர்ந்து விவசாயம் செழிக்க வேண்டி ஊருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயிகள் பொன்னேர் பூட்டி உழவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் உற்சாகமாக கலந்து கொண்டு விவசாய பணிகளை தொடங்கினர். இதேபோல், வில்வமரத்துப்பட்டி, பல்லாகுளம், பிள்ளையார்நத்தம், கருத்தையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு பொன்னேர் பூட்டும் திருவிழா நடைபெற்றது.
More