தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Women Entrepreneur Sells Masalas And Doing Online Business Her Success Story

ஆன்லைனில் மசாலா விற்பனை – அசத்தும் பெண் தொழில்முனைவோர்

Priyadarshini R HT Tamil
Feb 19, 2023 12:30 PM IST

HT Tamil Business Special: இப்போதெல்லாம் பெண்கள் ஆன்லைனில் தங்களது சொந்த தயாரிப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பெற்று அவற்றை விற்பனை செய்து பொருளாதார தன்னிறைவு பெறுகிறார்கள். வீட்டிலிருந்தே செய்யக்கூடியதால் இது அவர்களுக்கு நல்ல தேர்வாக உள்ளது. அதுபோன்ற ஒரு பெண் தொழில்முனைவோரின் கதை இது.

ஆன்லைனில் மசாலாக்கள் விற்கும் பெண் தொழில்முனைவோர் ஷியாமிளி பிரேம்
ஆன்லைனில் மசாலாக்கள் விற்கும் பெண் தொழில்முனைவோர் ஷியாமிளி பிரேம்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய காலத்தில் ஆண், பெண் இருவருமே வேலைக்குச் செல்லவேண்டிய நிலை உள்ளது. யாராவது ஒருவர் வீட்டில் இருந்து கவனித்தால்தான் குழந்தைகளுக்கு தேவையானதை செய்ய முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இன்றைய காலத்தில் இல்லை என்பதுதான் உண்மை. குழந்தை பிறந்தது முதலே அவர்களை கிரிச்சில் விட்டுவிட்டு இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்த அவசர கதியில் சமைப்பது யாராக இருந்தாலும், கையில் கிடைக்கும் மசாலாப்பொருட்களைப் பயன்படுத்தி அந்தவேளை உணவு தயாரித்து வேலையை முடித்துவிடவேண்டும். 

அந்த மசாலாக்களை சுவையுடனும், தரமுடனும் ஒருவர் வீட்டிலே தயாரித்து கொடுத்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? வணிக நோக்கின்றி அதேநேரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபத்தையும் வைத்து எஸ்ஹெச்டி மாசலா என்ற பெயரில் ஒருவர் சாம்பார், ரசப்பொடிகள் முதல் சிக்கன், மட்டன் ஸ்பெஷல் மசாலாக்கள் வரை உங்களுக்கு தேவையான அனைத்து மசாலாக்களையும் தயார் செய்து தருகிறார். அவர் ஷ்யாமிளி ப்ரேம் என்ற பெண் தொழில்முனைவோர். அவர் ஆன்லைனில் இந்த தொழிலை செய்வதற்கு துவங்கினார்.

அவரது எஸ்ஹெச்டி மசாலா நிறுவனம் குறித்து ஷ்யாமிளி ப்ரேம் கூறுகையில், 

எனக்கு பொதுவாகவே சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் வீட்டிலேயே நல்ல உணவுகளை தயார் செய்து அனைவருக்கும் கொடுப்பேன். அப்போது முகநூலில் சமையல் குழுக்களில் இணைந்து அவர்களின் ஊக்குவிப்புடன் விதவிதமாக சமைப்பேன். ஒருமுறை ஆதித்தியா டிவி நிகழ்ச்சிக்காக மட்டன் சுக்கா செய்தேன். அதை சுவைத்த அனைவருமே மிக அருமை என்றார்கள். 

நான் ருசி 6 என்ற எனது முகநூல் சமையல் குழுவில் அதை துவங்கிய மற்றும் சமையலில் ஆர்வமுள்ள வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவரின் வழிகாட்டலால் இந்த தொழிலை துவங்கினேன். அவர் சமையல் கலையில் ஆர்வமுள்ளவர் மற்றும் அசத்தப்போவது யாரு டைட்டில் வின்னர். அவரும், நண்பர்களும் என்னை மசாலாக்கள் தயாரித்து விற்பனை செய்யலாம் என ஊக்குவித்தனர். தொடர்ந்து நானும் மசாலா தயாரிக்க துவங்கினேன். முதலில் சில கிலோக்களில் துவங்கி, தற்போது 200 கிலோக்களை தாண்டி தயாரித்து வருகிறேன். அனைத்தும் ஆன்லைனில்தான் விற்கிறேன். ஓட்டல்களுக்கு கூட தற்போது ஆடர்கள் கிடைக்கின்றன. உள்நாட்டு விற்பனையை தொடர்ந்து தற்போது வெளிநாட்டுக்கும் கிலோ கணக்கில் பார்சல் அனுப்புகிறேன்.

முதலில் வீட்டிலே சிறிய அளவில் செய்துகொண்டிருந்தேன். தற்போது அதற்கான இயந்திரங்களை வாங்கி, தனி தயாரிப்பு அலுவலகமும் துவங்கிவிட்டேன். எனது தந்தை இன்ஜினியர் என்பதால் எனக்கு அவரே மசாலாக்கள் வறுக்கும் இயந்திரத்தை உருவாக்கி கொடுத்துவிட்டார். எனது மொத்த குடும்பமும், கணவர் ப்ரேம், கொளுந்தனார் நவராஜ், இரண்டு குழந்தைகளும் இதற்கு உறுதுணையாக உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்குப்பின் ஏற்பட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன்தான், ஆனாலும் ஆர்வத்துடன் செய்வதால், அவற்றையெல்லாம் கடந்து இந்த தொழிலில் உற்சாகத்துடன் ஈடுபட முடிகிறது. தரமான மசாலாக்களை மக்களுக்கு கொடுப்பதே எனது நோக்கம் என்று அவர் கூறினார். இவரது மசாலா பொருட்கள் குறித்த தகவல்களை இங்கே குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம். www.shdmasala.in    

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்