தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanyakumari: பலே கில்லாடிமா நீங்க - பிளான் போட்டு சம்பவம் செய்த பெண்!

Kanyakumari: பலே கில்லாடிமா நீங்க - பிளான் போட்டு சம்பவம் செய்த பெண்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 04, 2023 11:13 AM IST

கடன் தொல்லையால் தன் மீது ஆசிட் வீசச் சொல்லி நாடகம் நடத்திய பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிட் வீச்சு நாடகம்
ஆசிட் வீச்சு நாடகம்

ட்ரெண்டிங் செய்திகள்

தனியாக இருக்கும் லதா புதிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என நினைத்துள்ளார். இதன் காரணமாக லதாவின் உறவினரான ஜஸ்டின் கிருபைதாஸ் என்பவர் அவரது கடையை அருகே அரவை மில் வைத்துக் கொடுத்திருக்கிறார்.

அந்த அரவையும் இல்லை லதா நடத்தி வந்துள்ளார். வேலையை முடித்துவிட்டுக் கடந்த 30 ஆம் தேதி அன்று இரவு பேருந்தில் வீட்டுக்குச் சென்றுள்ளார் லதா. வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் அவர் மீது ஆசிட் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

லதாவின் கை உள்படப் பல இடங்களில் ஆசிட் பட்டதால் வலியால் அங்கேயே துடித்துள்ளார். உடனே அப்பகுதியில் இருந்து மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒரு பெண் மீது திடீரென ஆசிட் விசேஷ சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இரண்டு தனிப்படைகளை அமைத்து ஆசிட் வீச்சு நடத்தியவர்களைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டனர். இது குறித்த பகுதியிலிருந்து சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் லதாவின் உறவினரான ஜெஸ்டின் கிருபை தாஸ், அவருடைய நண்பர் ஜெஸ்டின் ராபின்சன், ஷா, அஜின்குமார் உள்ளிட்டவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லதாவின் மீது ஆசிட் வீச இவர்களே ஆட்களை ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது.

நாடகக் கும்பல்
நாடகக் கும்பல்

இது குறித்து காவல்துறையினர்," லதா வீடு கட்டியதால் சுமார் 50 லட்ச ரூபாய்க் கடன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடனின் வட்டியாக அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்து லதா இந்த சிக்கலைத் தனது உறவினரான ஜெஸ்டின் கிருபைதாசிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெஸ்டின் கிருபை தாஸ் தனது நண்பரான ராபின்சனிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

அப்போது லேசாக லதா மீது ஆசிட் வீச்சு செய்துவிட்டு இந்த பழியைக் கடன் கொடுத்தவர்கள் மீது போட்டு விடலாம். அவர்கள் பயந்து போய் கடனை திருப்பி கேட்க மாட்டார்கள் என அவர் ஆலோசனை கொடுத்துள்ளார்.

இந்த ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து மூவரும் விரிவாகத் திட்டம் தீட்டி உள்ளனர். பின்னர் திட்டத்தின்படி செங்குடி பகுதியைச் சேர்ந்த ஷாரின், கல்லங்குழி பகுதி சேர்ந்த அஜின் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்தத் திட்டத்திற்கு ஜெஸ்டின் கிருபைதாஸ் மற்றும் ராபின்சன் ஆகியோர் ஆசிட் வாங்கி கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆசிட் வீசுபவர்களுக்கு லதாவை அடையாளம் காட்டியுள்ளனர். அதன் பின்னர் இருவரும் லதாவின் மீது ஆசிட் வீச்சு நடத்தியுள்ளனர். தற்போது இந்த ஆசிட் விச்சு நாடகத்திற்கு லதா எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்