தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Will Meeting Gk Vasan Ops Be Beneficial?

Erode By-Election: ஜி.கே.வாசன் ஓபிஎஸ் சந்திப்பால் பலன் கிடைக்குமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 21, 2023 11:43 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் அணி போட்டியிடுவதா அறிவித்த ஓ.பி.எஸ் ஜி.கே.வாசனை சந்தித்துள்ளார்

கோப்புப்படம் (ஓ.பி.எஸ்-ஜி.கே.வாசன்)
கோப்புப்படம் (ஓ.பி.எஸ்-ஜி.கே.வாசன்)

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அத்தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு மீண்டும் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது திமுக.

இந்நிலையில் திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கே வாய்பு அளிக்கலாமா அல்லது அவரது குடும்பத்தாரை நிறுத்தலாமா என தேசிய தலைமையுடன் கே.எஸ். அழகிரி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

கடந்த தேர்தலில் அத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் யுவராஜா போட்டியிட்ட நிலையில், வெறும் 8ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட யுவராஜா முனைப்பு காட்டி வந்த நிலையில் நேற்றையதினம் ஜி.கே.வாசனை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர், ஜெயக்குமாருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றிக்கு உழைப்போம் என தெரிவித்திருந்தார். தமாகா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக நேற்று ஜி.கே.வாசன் அறிவித்தார்.

அதேசமயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 14 பேர் கொண்ட பாஜக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருந்தார். அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கமலாலயத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அண்ணாமலையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், " ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கே முழு உரிமை உள்ளது. தேர்தல் சின்னத்தில் உள்ள பிரச்சனை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட தயார் என்றார். கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருவோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட விரும்பினால் ஆதரவு தருவோம் என்றார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ் அனைத்து தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்துவோம். வாய்ப்பு கிடைத்தால் சசிக்கலாவிடமும் பேசுவோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது ஜி.கே. வாசனை ஆழ்வார் பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து ஆதரவு கோரி உள்ளார்.

ஏற்கனவே ஓபிஎஸ் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜி. கே.வாசன், "இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ், அவருடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் நிலைப்பாட்டினை தேர்தல் களத்தில் பிரதிபலிக்கின்றனர். ஓபிஎஸ் உங்களிடம் ஆதரவு கேட்டால், தங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என செய்தியாளர்களின் கேள்விக்கு அது அவரது உரிமை, அவரது முடிவு. இதுபற்றி இப்போது கருத்து கூற முடியாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் இன்று மாலை பாஜக தலைவர் அண்ணமலையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்