தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  L Murugan: பிரகாஷ்ராஜ் ஒரு கன்னட நடிகர்! தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்! விளாசும் எல்.முருகன்!

L Murugan: பிரகாஷ்ராஜ் ஒரு கன்னட நடிகர்! தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்! விளாசும் எல்.முருகன்!

Kathiravan V HT Tamil
Jun 01, 2024 03:52 PM IST

இந்தியா கூட்டணி தோல்வி நிச்சயிக்கப்பட்ட ஒன்று, அவர்கள் நூறு சீட்டு தாண்டுவதே கஷ்டம். அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஜெயிலுக்கு சென்றுவிட்டுவார். மம்தா, ஸ்டாலின் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால் இந்தி கூட்டணி, இல்லாத கூட்டணியாகிவிட்டது.

L Murugan: பிரகாஷ்ராஜ் ஒரு கன்னட நடிகர்! தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்! விளாசும் எல்.முருகன்!
L Murugan: பிரகாஷ்ராஜ் ஒரு கன்னட நடிகர்! தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்! விளாசும் எல்.முருகன்!

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி: பிரதமர் அரசியலுக்காக தியானம் செய்வதாக காங்கிரஸ் கட்சியும், பிரகாஷ் ராஜும் கூறுகின்றனரே?

பிரகாஷ் ராஜிடமும், காங்கிரஸ் தலைவரிடமும் என்ன எதிர் பார்க்க முடியும். உலக நன்மைக்காக தான் பிரதமர் தியானம் செய்து வருகிறார். சென்ற தேர்தலின்போது இமயமலையில் மோடி அவர்கள் தியானம் செய்தார். இன்றைக்கு குமரியில் முனிவர் போல தியானம் செய்து உள்ளார். 

கேள்வி: இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?

இந்தியா கூட்டணி தோல்வி நிச்சயிக்கப்பட்ட ஒன்று, அவர்கள் நூறு சீட்டு தாண்டுவதே கஷ்டம். அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஜெயிலுக்கு சென்றுவிட்டுவார். மம்தா, ஸ்டாலின் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால் இந்தி கூட்டணி, இல்லாத கூட்டணியாகிவிட்டது. இந்தி கூட்டணியால் நாட்டுக்கு எந்த பிரயோஜனும் இல்லை. 

கேள்வி: தமிழ்நாட்டில் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை நாங்கள் பெற உள்ளோம். இரட்டை இலக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டில் இருந்து மோடிஜிக்கு சமர்பிக்க உள்ளோம். 

கேள்வி: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் மீண்டும் தருவாரா? கருப்பு பணத்தை அழிப்பாரா?

மீடியாக்களாலும், எதிர்க்கட்சிகளாலும் கட்டவிழ்க்கப்பட்ட கட்டுக்கதை, பிரதமர் எந்த இடத்திலும் 15 லட்சம் ரூபாய் தருவேன் என்று சொன்னது கிடையாது. இந்தி தெரியாதவர்கள், முறையாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். 

கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் சிறையில் உள்ளதற்கு காரணம் பிரதமர்தான், பிரதமரின் அடுத்த ஆட்சியில் ஊழல் என்பதே இருக்காது, ஊழல்வாதிகள் சிறையில் இருப்பார்கள். கருப்பு பணத்திற்கு இந்தியாவில் இடமே கிடையாது. 

கேள்வி:- கலைஞர் உயிரோடு இருந்தால் யாரும் வாலாட்ட முடியாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறி உள்ளாரே?

கருணாநிதி அவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அனைவருக்கும் தெரியும். பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அவர் ஒரு கர்நாடக நடிகர், அவர் அங்கு உள்ள கருத்துக்களை சொல்லலாம், அவரது கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.

வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியான இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்