Thirumavalavan : நான் தலித் அல்லாத சமூகத்திற்கு எதிரி என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது - திருமா உருக்கம்!
VCK Leader Thirumavalavan : எடுத்தோம் கவுத்தோம் என்ற ஒரு விஷயத்தை அரசியலில் சென்று சாதித்து விட முடியாது. கட்சியில் இணைந்த உடன் சீட்டை பெற்று எம்எல்ஏவாகி, ஜெயித்து விட முடியாது அதற்கென்று, ஒரு படிநிலை உள்ளது. இருந்து கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னத்தில், சிதம்பரத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமார் விழுப்புரம் வெற்றி பெற்றனர். இதையடுத்து இரண்டு நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெற்றதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விடுதலைக் சிறுத்தைகள் கட்சி மாறியது.
இதை விசிக கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்திப்பதற்காக வந்தார்இதனால் சென்னை அசோக் நகர் உள்ள விசிக அலுவலகத்தில், அவரை வரவேற்பதற்காக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.
அரசு ஊழியராக இருந்து கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டேன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “ எடுத்தோம் கவுத்தோம் என்ற ஒரு விஷயத்தை அரசியலில் சென்று சாதித்து விட முடியாது. கட்சியில் இணைந்த உடன் சீட்டை பெற்று எம்எல்ஏவாகி, ஜெயித்து விட முடியாது அதற்கென்று, ஒரு படிநிலை உள்ளது. அரசு ஊழியராக இருந்து கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டேன்.
அரசு ஊழியராக இருக்கும் பொழுது என்னை பணியில் இருந்து நீக்குவதற்காக காவல்துறையிடம் இருந்து அழுத்தம் வந்தது அப்பொழுது இயக்குனராக இருந்தவர் புனை பெயர் வைத்து செயல்படுங்கள் என அறிவுரை சொன்னார்.
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கட்சியின் பெயர் வைக்கும் பொழுது இசைத்தன்மை இல்லை என்று சொன்னார். அது ஒரு ஆக்ரோஷத்தை உருவாக்குவது போல் இருக்கிறது என்று சொன்னார், எப்படி பொதுமக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார் என்று கேள்வி எழுப்பினார்.
காவல்துறை சொன்ன அறிவுரை
கல்யாணம் செய்து கொள்ளாமல் நீங்கள் அரசியல் செய்தால் எந்த சமூகத்திற்காக செய்கிறீர்களோ அந்த சமூகமே உங்கள் பின்னாடி வராது என்று சொன்னார்கள். இவை எல்லாம் எனக்கு காவல்துறை சொன்ன அறிவுரை. இதையெல்லாம் காதில் கேட்டுக் கொண்டேனே தவிர எனக்கு என்ன ஒரு பாதை இருந்தது.
இயக்கத்தை தொடங்கிய பொழுது தேர்தல் அரசியல் என்ற சிந்தனை இல்லாமல் இருந்தது, மேலவளவு பிரச்சனை தான் சிந்தனையை மாற்றியது. அது தான் அடிப்படையாக அமைந்தது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மேலவளவு ஏற்றுக்கொள்ள முடியாது என சொல்லி படுகொலை செய்வோம் என கூறியது. அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு விசிக இயக்கம் ஆளானது.
பின்னர் விழுப்புரம் நடந்த மாநில செயற்குழுவில் கொள்கை மாறாமல் தேர்தல் அரசியல் செயலாம் என்று முடிவு எடுத்தோம். சமூக இயக்கமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள், ஒரு அரசியல் இயக்கமாக பரிணாம வளர்ச்சி அடைந்தது, இவை எல்லாம் 1998 இல் நடந்தது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே நாங்கள் பிரச்சனை
1998ல் திமுக ஆட்சி, பாமக உடன் இருப்பது அப்போது விசிக பற்றி எடுத்த எடுப்பிலேயே அவதூறு பரப்பியது பாமக. தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே நாங்கள் பிரச்சனையை சந்தித்தோம். 98 - 99 காலகட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி தலைவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் தான் தேர்தல் அரசியலை கையில் எடுத்தோம்.
சிதம்பரம் தொகுதியில் ஒரே ஒரு வேட்பாளர் போட்டி என்று முடிவெடுத்தோம். அப்போது மூப்பனாரின் மூன்றாவது அணி சார்பாக கூட்டணியில் இணைந்து 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது அதில் 3 தொகுதிகளை திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
1999ல் அதன் பின்னர் சிதம்பரம் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். அதுவரை நான் அரசு உழியரகவே இருந்தேன். சிதம்பரத்தில் நீங்கள் நிற்பதாக இருந்தால், சீட்டு தருகிறோம் இல்லையென்றால் இளையபெருமாளுக்கு தருகிறோம் என்று மூப்பனார் சொன்னார்கள்.
பின்னர் அரசு வேலையில் என்னை விடுவிக்க முடியாது என்று சொன்னார்கள். மூப்பனாரிடம் சொன்னேன் அவர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி உடனடியாக என்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தினால் உடனடியாக பணியில் விடுவிக்கப்பட்டேன். அரசியல் புரிதல் இல்லை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது வணக்கம் சொல்வது தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. மூப்பனாரின் சைக்கிள் சின்னத்தில் நின்றேன், அப்படி ஒரு எழுச்சி வேற எந்த தொகுதியிலும் இருந்திருக்காது சிதம்பரத்தில் எனக்கு அது அமைந்தது.
தேர்தல் வாக்குப்பதிவு அன்று திட்டமிட்டு வன்முறை
அதைப் பார்த்து புரிந்து கொண்டார்கள் தேர்தல் வாக்குப்பதிவு அன்று திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டது. 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாக்குதல் நடப்பது குடிசைகள் தீ வைக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அன்று விடுதலை சிறுத்தைகள் மீது ஏற்பட்ட வண்ணம் தான் இன்று வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது. அடித்தது அவர்கள் நாம் இல்லை. நான் தலித் அல்லாத சமூகத்திற்கு எதிரி என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது அதற்க்கு வன்முறை தான் காரணம். அப்போது என்னை ஆறுதல் படுத்தியவர் மூப்பனார்.
அதுதான் தேர்தல் காலத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறை தமிழகத்தில் அதற்கு முன்பும் நடந்ததில்லை அதற்கு பின்பும் நடந்ததில்லை. விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஏற்பட்ட எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாமக வன்முறை செய்தது. அந்த வன்முறையில் காயம் பட்ட தோழர்களுக்கு இந்த அங்கீகாரத்தை நான் காணிக்கையாற்றுகிறேன்.
வாழ்நாளில் மறக்க முடியாத துக்கங்கள் நிகழ்வு அது. இதனை வன்முறைக்கு பின்னர் 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பெற்று திருமாவளவன் யார் என்று இந்த சமூகம் உற்றுநோக்கி இருக்கு ஆனால் ஒரு எளிய குடும்பத்தின் பிறந்தவன் என்பதால் ஊடகங்கள் கூட என்னை கண்டு கொள்ளவில்லை அந்த காலகட்டத்தில் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்கள்.
வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்
அதன் பின்னர் திமுகவுடன் 2001 கூட்டணி, தனிச்சின்னத்தில் போட்டியிடலாம் என்ற விருப்பத்தைக் கூட சொல்ல முடியாத ஒரு ஆரம்ப கட்டத்தில் இருந்தோம், உதய சூரியன் சின்னம் போட்டிருக்கும் 8 தொகுதிகள் என்று போட்டு விட்டோம். இன்றைய திட்டக்குடி தொகுதியிலே நான் மட்டும் வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இப்போது நான் கண்ட அனுபவம் கசப்பான அனுபவம் உதயசூரியின் சின்னத்தை வரையக் கூட அவர்களது கை கூசியது. அந்த சின்னத்தில் எனக்காக ஓட்டு போட மனமில்லை.
பின்னர் 2:30 ஆண்டுகளில் அந்த பதிவை ராஜினாமா செய்து விட்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்து புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து கூட்டணி வைத்தோம் யாருக்கும் அங்கு எவ்வளவு வாக்கு கிடையாது இருந்தபோதிலும் அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் முன்பே காட்டிலும் 30000 வாக்குகள் அதிகமாக பெற்றேன்.
2006 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தல் ஆண்களின் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோளாக என்னிடம் சசிகலா ஜெயலலிதா மற்றும் நடராஜன் சொன்னார்கள். இல்லை இனி நாங்கள் தனித்து நிறத்தில் தான் நிற்போம் என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதில் நான் உறுதியாக இருந்தேன், தமிழ்நாட்டில் 9 இடம் புதுச்சேரியில் 1 இடம் என பத்து இடத்தில் இரட்டை இலை சின்னத்தில் என்றால் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி என்று சொன்னார்கள். நூற்றுக்கு நூறு தோல்வி என்றாலும் பரவாயில்லை தனி சின்னத்தில் போட்டியின்றி சொன்னோம்.
நிரந்தரமாக நாம் பானை சின்னம் தான்
அந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தனிச்சின்னத்தில் மணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். ஒன்று காட்டுமன்னார்கோயில், மற்றொன்று திட்டக்குடி.
2009 ஸ்டார் சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் போட்டிகள் 2006 இல் இருந்து தனி சின்னத்திலேயே போட்டியிட தொடங்கியது விடுதலை சிறுத்தைகள். உச்சநீதிமன்றம் வரை சென்று ஸ்டார் சின்னத்தை பெற்று அந்த தேர்தலில் போட்டியிட்டோம்.
2011யில் தேர்தலில் மெழுகுவர்த்தி, 2014 - மோதிரம் சின்னம், 2016 மீண்டும் மோதிரம் சின்னம், 2019 பானை சின்னம், 2021 - மீண்டும் பானை சின்னம், 2024 - மீண்டும் பானை சின்னம். இப்போது நிரந்தரமாக நாம் பானை சின்னம் தான்” என பேசினார்.
டாபிக்ஸ்