Top 10 Tamilnadu News: 'தவெகவால் பாதிப்பு திமுகவுக்கு தான்', இபிஎஸ்-ஐ சந்தித்த கவுதமி.. மேலும் முக்கியச் செய்திகள்
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். விநாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் முக்கியச் செய்திகளைப் பார்ப்போம்.
'தவெகவால் பாதிப்பு திமுகவுக்குதான்', இபிஎஸ்-ஐ சந்தித்த கவுதமி.. மேலும் முக்கியச் செய்திகள்
ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் வரும் நவ.,1ல் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
- திமுக சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
- நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். விநாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இபிஎஸ்-ஐ சந்தித்த கவுதமி
- அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டதை ஒட்டி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகை கவுதமி.
- புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் கலக்குளத்தில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு. அங்குள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த காயத்ரி (14), கவிஸ்ரீ (4) இருவரும் குளத்தின் குறுக்குப் பாதையில் நடந்து செல்லும் போது பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இருவரையும் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் அபராதம். நெல்லை மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர், மலம் கழித்தால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வள்ளியூர் பேரூராட்சியில் அமலுக்கு வந்தது. அதன்படி, திறந்தவெளியில் சிறுநீர் கழித்தால் 100, மலம் கழித்தால் 7500 அபராதம் வசூலிக்க முடிவு.
'திமுகவுக்குத்தான் பாதிப்பு'
- "த.வெ.க.வால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பு இல்லை. ஆளும் திமுகவுக்குத்தான் பாதிப்பாக இருக்கும். த.வெ.க.வின் கொள்கைகள் வரவேற்கத்தக்கது. எம்.ஜி.ஆரை சுட்டிக்காட்டி பேசியிருப்பதும் வரவேற்கத்தக்கது" என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
- மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், புதுச்சேரி பாஜக எம்.பி. செல்வ கணபதியிடம் நேரில் சென்று விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில், காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் 2 மாத கால அவகாசம் கோரி செல்வகணபதி, சிபிசிஐடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தங்கக் கட்டிகளை விற்று பணமாக தருமாறு செல்வகணபதி, ஹவாலா புரோக்கர் சூரஜிடம் கேட்டதன் அடிப்படையில் விற்றுக்கொடுத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
- வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.
- முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை ஒட்டி அக்.30ம் தேதி பசும்பொன் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 30ம் தேதி புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவம்பர் 16ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- “தேர்தல் கூட்டணியில் இணைந்தால் நமது தனித்தன்மையை இழந்து விடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். அதற்கு விஷம் குடித்துவிட்டு படுத்துக்கொள்ளலாம். நான் கூட்டணி வைக்காமல் தோல்வியை சந்திப்பதால் உங்களுக்கு என்ன இழப்பு?” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.