Rowdy Encounter: புதுக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை சுட்டுக்கொலை - என்கவுன்டர் நடந்தது எப்படி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rowdy Encounter: புதுக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை சுட்டுக்கொலை - என்கவுன்டர் நடந்தது எப்படி?

Rowdy Encounter: புதுக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை சுட்டுக்கொலை - என்கவுன்டர் நடந்தது எப்படி?

Jul 11, 2024 07:31 PM IST Karthikeyan S
Jul 11, 2024 07:31 PM , IST

  • Rowdy Durai Encounter: திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் புதுக்கோட்டையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி உறையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் துரை. பிரபல ரவுடியான இவர் புதுக்கோட்டை - திருச்சி மெயின் ரோடு அருகே வம்பன் தைலமர காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலா போலீசார் அந்தப் பகுதிக்கு சென்றனர்.

(1 / 6)

ரவுடி துரையை பிடிக்க சென்றபோது போலீசாருக்கும் ரவுடி துரைக்கும் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸாரை ரவுடி துரை கத்தியால் தாக்கியதால் பாதுகாப்பிற்காக போலீசார் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

(2 / 6)

காவல் ஆய்வாளர் முத்தையன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் துரையை காலில் சுட்டதாகவும், தப்பியோட முயன்ற போது துரையின் நெஞ்சுப் பகுதியை நோக்கி முத்தையன் துப்பாக்கியால் சுட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

(3 / 6)

ரவுடி துரையின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.காயமடைந்த காவல் ஆய்வாளர் முத்தையன், ஆலங்குடி உதவி ஆய்வாளர் மகாலிங்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

(4 / 6)

ரவுடி துரை என்கிற (துரைசாமி) மீது ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

(5 / 6)

சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது புதுக்கோட்டையை சேர்ந்த இளவரன் கொலை வழக்கு உள்பட 5 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே 2023-ல் திருச்சியில்  திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துசென்றபோது தப்பி சென்றவர் ரவுடி துரை.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்