மகப்பேறு இறப்பை குறைக்க 'வார் ரூம்', கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு.. மேலும் டாப் 10 செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மகப்பேறு இறப்பை குறைக்க 'வார் ரூம்', கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு.. மேலும் டாப் 10 செய்திகள்

மகப்பேறு இறப்பை குறைக்க 'வார் ரூம்', கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு.. மேலும் டாப் 10 செய்திகள்

Manigandan K T HT Tamil
Oct 23, 2024 01:04 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று அக்டோபர் 23ம் தேதி காலை முதல் பிற்பகல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

மகப்பேறு இறப்பை குறைக்க 'வார் ரூம்', கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு.. மேலும் டாப் 10 செய்திகள்
மகப்பேறு இறப்பை குறைக்க 'வார் ரூம்', கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு.. மேலும் டாப் 10 செய்திகள்
  • "பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே, அதுபோல பக்கத்துக் கட்சியில் விரிசல் ஏற்படுமா என ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணியில் விவாதங்கள் ஏற்படலாம். ஆனால் விரிசல் ஏற்படாது' என்றார் முதல்வர் ஸ்டாலின்.
  • மகப்பேறு இறப்பை குறைக்க War Room அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கில், 7 மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய ‘அவசர கால கட்டுப்பாட்டு அறையை' (War Room) தேசிய சுகாதார இயக்கக அலுவலகத்தில் அமைத்து, 24/7 அடிப்படையில் கண்காணிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில், உயிருடன் பிறக்கும் 1,00,000 குழந்தைகளில் மகப்பேறு இறப்பு 54 ஆக குறைந்துள்ளது. இது தேசிய சராசரியைவிட (97) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
  • முசிறியில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி. பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைத் துறை டிஐஜி சஸ்பெண்ட்

  •  வேலூர் சிறையில் கைதி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டிஐஜி வீட்டில் பணம், நகை திருடியதாகக் கூறி கைதி சிவக்குமாரைத் தாக்கியதாக அவரது தாய் கலாவதி தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  •   சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் உரிமையாளர் கோட்டீஸ்வரி வீட்டில் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீராம் பிராப்பட்டீஸ் கட்டுமான நிறுவன மேலாளர் ரவிச்சந்திரன் வீட்டிலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  •   உரிமைகளை பறிக்காதீர்கள் என்று போராடும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஆதரவு. விஞ்ஞான புரட்சி ஏற்பட்ட இந்த காலத்திலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நிலை மாறவேயில்லை என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

ஒகேனக்கல் காவரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

  •   ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு. வினாடிக்கு 31,000 கன அடியாக உயர்ந்ததால் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 12 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
  •   சொத்துவரி உயர்வுக்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள், 6% சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.
  •  “முதலமைச்சர் ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார். நான் கனவு காண்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார்; ஆனால் அவர்தான் பகல் கனவு காண்கிறார்; மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும் அதிமுகவுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் பொறுப்பு வாங்குவதற்காக முதல்வர் கூட்டணி அமைத்துள்ளார்; திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் கட்சியின் உயர் பொறுப்புக்கு வர முடியும்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
  •  கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள், மண் கிடப்பதால் போக்குவரத்து முழுவதும் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.