Top 10 News: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைப்பு முதல் நயன்தாரா அறிக்கை வரையிலான 10 செய்திகள்!
அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம் முதல் நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை வரையினான இன்றைய மாலை டாப் 10 செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்.
அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம் முதல் நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை வரையினான இன்றைய மாலை டாப் 10 செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்.
அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்று மதியம் 169 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. தொழில் நுட்ப கோலாறு காரணமாக விமானம் அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கியது. இது பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைப்பு
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
ராட்சத அலையில் சிக்கிய 2 பேர் மாயம்
மாமல்லபுரம் கடல் பகுதியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி கிரிஸ், ரியாஸ் ஆகிய 2 பேர் மாயம் அடைந்துள்ளனர். அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது -சு.வெ.
சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சடிக்கப்பட்டிருப்பதற்குசு.வெங்கடேசன் எம்.பி.,கண்டனம் தெரிவித்துள்ளார்.
"வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது. மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்" இவ்வாறு சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு வினையாகிய சோகம்..
திருச்செங்கோடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் தெப்பக்குளத்தில் கம்பம் விடும்போது குளத்தில் குதித்து விளையாடிய முகிலன் என்பவர் நீரில் மூழ்கினார். ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி சடலமாக மீட்கப்பட்டார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி! உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு
நம் விளையாட்டு வீரர் - வீராங்கனையரின், சாதனைக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது, என்ற நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி , தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் வாயிலாக பல்வேறு வீரர் - வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். சசிபிரபா மற்றும் ஜெகதீஷ் டில்லியின் திறமையின் மேல் நம் திராவிடமாடல் அரசு வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவர்களின் கனவு நனவாகட்டும். வாழ்த்துகள்! இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
அசைவ திருவிழா!
திருமங்கலம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சடச்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற அசைவ விருந்து திருவிழா நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில், 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
தனுஷ்க்கு எதிராக கொந்தளித்த நயன்தாரா
நெட்பிளிக்ஸில் வெளியான ஆவணப்படத்தில் என் வாழ்க்கையில் முக்கிய படமான நானும் ரவுடிதான் குறித்து சேர்க்க முடியாமல் போனது மற்றும் அந்த படத்தின் புகைப்படங்கள் பாடல்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஒப்புதல் கேட்டு இரண்டு வருடங்களாக அலைந்தோம். ஆனாலும் இறுதிவரை அது நடக்கவில்லை. ட்ரைலரில் இருக்கும் 3 வினாடி காட்சிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி தருகிறது. தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஏற்கனவே இணையத்தில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பது மிகவும் நிநோதமாக இருக்கிறது. என்று பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து நடிகை நயன்தாரா தனுஷை சாடி அறிக்கை வெளியிட்டுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா எதிராக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை
"உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் 2 வருடம் பொறுமையோடு அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்து கொண்டு என்னை மன உளைச்சல் ஆக்கியதற்கு நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்" என்று தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் நடிகை நயன்தாராவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்