TOP 10 NEWS: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முதல் உதயநிதி சவால் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஈபிஎஸ்க்கு உதயநிதி சவால், அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் அறிவுரை, மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி சர்ச்சை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 2 நாட்களில் இது வலு அடைந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
2.ஈபிஎஸ் உடன் விவாதிக்க தயார்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் நேரடியாக விவாதம் செய்யத் தயாராக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
3.நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் அறிவுரை
அதிமுகவின் உட்கட்சி செயல்பாடுகள் குறித்து வெளிப்படை தன்மை உடன் அறிக்கை வழங்க வேண்டும். மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் ஆய்வு செய்து கட்சியின் செயல்பாடுகள் எப்படி உள்ளதுஎன கூற வேண்டும் என அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை.
4.மாணவர்களுக்கு பிளாஸ்திரி ஒட்டியதால் சர்ச்சை
தஞ்சாவூரில் உள்ள அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் பேசிய மாணவர்கள் சிலரது வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
5.தவெக பொதுசெயலாளர் அறிக்கை
வாக்காளர் சிறப்பு முகாம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மேற்பார்வையில் தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை ஈடுபடுத்திக் கொண்டு தொகுதி பிரச்சாரம் செய்ய வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை.
6. தமிழக கிராண்ட் மாஸ்டர் வெற்றி
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரணவ் வெங்கடேஷ் பெற்றார்.
7.உடற்கல்வி ஆசிரியர் கைது
திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கோவையில் கைது. ஆசிரியர் பொன்சிங் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை.
8. மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட்
மயிலாடுதுறையில் சிவரஞ்சினி என்பவருக்கு பிறந்த குழந்தைக்கு மருத்துவரின் தவறான சிகிச்சையால் இறந்ததாக குற்றம்சாட்டி குழந்தை உடல் உடன் உறவினர்கள் சாலைமறியல் செய்த நிலையில் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் ரம்யாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் பானுமதி நடவடிக்கை.
9. தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களை பணி நியமனம் செய்ய அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூடத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்த பிறகு தான் ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கையே வெளியிடப்படும். ஆனால், தேர்வு முடிவுகளே வெளியிடப்பட்டு பல மாதங்களான பிறகு ஆசிரியர்கள் நியமனத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுவது வினோதமாக உள்ளது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
10. மீனவர்கள் கைதுக்கு அன்புமணி எதிர்ப்பு
வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கும் நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்