Tamil Top 10 News: ‘தவெக கொடி விழாவுக்கு சிக்கல்! செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு எப்போது?’ இன்றைய டாப் 10 நியூஸ்!-todays evening top 10 news with including senthil balaji bail case armstrong murder case director nelsons wife - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: ‘தவெக கொடி விழாவுக்கு சிக்கல்! செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு எப்போது?’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Tamil Top 10 News: ‘தவெக கொடி விழாவுக்கு சிக்கல்! செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு எப்போது?’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Aug 20, 2024 05:54 PM IST

Tamil Top 10 News: செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு, விஜயின் தவெக கட்சி கொடி அறிமுக விழாவுக்கு கட்டுப்பாடு, மத்திய அரசின் நேரடி பணிநியமன அறிவிப்பு ரத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

Tamil Top 10 News: ‘தவெக கொடி விழாவுக்கு சிக்கல்! செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு எப்போது?’ இன்றைய டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: ‘தவெக கொடி விழாவுக்கு சிக்கல்! செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு எப்போது?’ இன்றைய டாப் 10 நியூஸ்!

கனகசபை தரிசனத்தை தடை செய்ய கூடாது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

தவெக கொடி அறிமுக விழாவுக்கு கட்டுப்பாடு

தமிழக வெற்றி கழககத்தின் கொடி அறிமுக விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மருத்து உள்ளதாக தாகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க

19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் போராட்டம் 

மகாராஷ்டிராவில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் தானேவில் ரயில்களை மறித்து போராட்டம். 

மேலும் படிக்க

கொல்கத்தாவில் வலுக்கும் போராட்டம் 

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொடூர கொலைக்கு நீதிகேட்டு நடைபெறும் போராட்டம் தீவிரம். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி.

மேலும் படிக்க

நேரடி நியமன அறிவிப்பு ரத்து 

மத்திய அரசு பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமனம் செய்யும் அறிவிப்பு ரத்து. 

சமூகநீதியை பாதுகாக்க ராகுல் சூளுரை! 

என்ன விலை கொடுத்தாவது இட ஒதுக்கீட்டையும், சமூகநீதியையும் பாதுகாப்போம் என ராகுல் காந்தி உறுதி. 

இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை. ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு அடைக்கலம் கொடுத்தாரா என்ற கோணத்தில் விசாரணை.  

மேலும் படிக்க

3 தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்

விஜயகாந்த், செல்வப்பெருந்தகை, தமிழிசை ஆகியோர் இல்லங்களில் போடப்பட்டு இருந்த பாதுகாப்பு வாபஸ்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து உள்ளது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.