Actor Vijay's TVK Flag: ஏ.ஆர்.ரகுமானால் விஜய்க்கு வந்த வினை! தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு?
Vijay's TVK Party Event: ஆதித்யராம் சிட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டத்தில் நடிகர் விஜய் பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கடிதம் தரப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றிய பின்னர், அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஆதித்யராம் சிட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டத்தில் நடிகர் விஜய் பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கடிதம் தரப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே ஆதித்யராம் சிட்டியில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல்களை சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி மறுத்து உள்ளதாக கூறப்படுகின்றது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் 300 பேர் வரை அமரக்கூடிய பகுதியாக உள்ளதால், அங்கேயே அனைத்து நிகழ்வுகளை நடத்திக் கொள்ளவும் காவல்துறை அனுமதி அளித்து உள்ளது.
விக்கிரவாண்டியில் முதல் மாநாடா?
வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். டுகொடி அறிமுக விழா சிறப்பாக நடைபெற வேண்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விரதம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்த மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக நடிகர் விஜயின் பெயரை குறிக்கும் வகையில் ’வாகை’ மலர் தவெக கொடியில் இடம் பெற்று இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வு!
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார்.
ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்பட போவதாக தெரிவித்தார். அத்துடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாகவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் செயலி மூலமாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
மாணவர்களை சந்தித்த விஜய்!
முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதற்கான சாவியை புஸ்ஸி ஆனந்த் பயனாளிகளுக்கு வழங்கி இருந்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கட்சியின் முதல் மாநாடு எங்கே?
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.