DMK vs Annamalai: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால்..’ திமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை!-if dmk interferes further in the management of chidambaram nataraja temple annamalai alert - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Vs Annamalai: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால்..’ திமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை!

DMK vs Annamalai: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால்..’ திமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 29, 2023 11:28 AM IST

கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வரும் வருவாயை, சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அத்துமீறும் அறநிலையத்துறை

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது வருடாவருடம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் விழாவின் முடிந்து நான்கு நாட்களுக்கு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை. மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலை, தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்களை மட்டும் அல்ல, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை அரசு அதிகாரிகளும், அமைச்சரும் நினைவில் கொள்ள வேண்டும்.

13.12.1951, 2591/1951 மனு மீதான விசாரணைக்குப் பிறகு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் தீக்ஷிதர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 2660 வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ், இந்து சமயத்தின் ஒரு உட்பிரிவு (Denominated community) என்றும், 668/1951 என்ற மனுவின் மீதான விசாரணைக்கு பிறகு வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக அதிகாரம் தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனை எதிர்த்து, 1953 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதி 107ன்படி, இந்து சமயத்தின் உட்பிரிவுகள் (Denominated Community) நிர்வகிக்கும் கோவில்களில் தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இன்று நடக்கும் அத்துமீறல் போல். முந்தைய திமுக ஆட்சியிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர 2009ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்தது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிதம்பரம் நடராஜர் கோவிலின், நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள நகைகள், தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கை தீக்ஷிதர்களால் ஏற்கப்பட்டு, அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியில் இருந்த இந்தத் திறனற்ற திமுக அரசு, தொடர்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் எதோ ஒரு பிரச்சினையை உருவாக்கவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதிகாரவரம்பை மீறும் செயலாக, சென்ற ஆண்டு மே மாதம், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. கனகசபை மீது அனைவரும் ஏறி வழிபடலாம் என்ற அறிவிப்புடன் வெளியான அந்த அரசாணையைக் கூட, தீக்ஷிதர்கள் எதிர்க்கவில்லை. ஆனித் திருமஞ்சனம் விழாவின் போது கோவில் நகைகள் அனைத்தும் தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக, நான்கு நாட்கள். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. கனகசபை

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இல்லாத ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து, கோவில் நடைமுறையில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான, 3500 ஏக்கர் நிலத்தைப் பராமரித்து வரும் தமிழக அரசின் சிறப்பு வட்டாட்சியர். கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வந்த வருவாய் கணக்குகளை தெரிவிக்கவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வரும் வருவாயை, சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.