Tamil Top 10 News: ஆளுநருக்கு புத்தகம் தந்த முதலமைச்சர்! 17 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! இன்றைய டாப் 10 நியூஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: ஆளுநருக்கு புத்தகம் தந்த முதலமைச்சர்! 17 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! இன்றைய டாப் 10 நியூஸ்

Tamil Top 10 News: ஆளுநருக்கு புத்தகம் தந்த முதலமைச்சர்! 17 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! இன்றைய டாப் 10 நியூஸ்

Kathiravan V HT Tamil
Aug 15, 2024 09:06 PM IST

Tamil Top 10 News: ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட முதலமைச்சர், 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, மதசார்பற்ற பொதுசிவில் சட்டத்தை வலியுறுத்தும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!

Tamil Top 10 News: ஆளுநருக்கு புத்தகம் தந்த முதலமைச்சர்! 17 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! இன்றைய டாப் 10 நியூஸ்
Tamil Top 10 News: ஆளுநருக்கு புத்தகம் தந்த முதலமைச்சர்! 17 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! இன்றைய டாப் 10 நியூஸ்

1.தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ராஜ்பவனுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு புத்தகம் பரிசு அளித்தார். 

2.அண்ணாமலை உடன் பேசிய அமைச்சர்

ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார். 

3.தேநீர் விருந்தில் கலந்து கொண்டது ஏன்?

ஆளுநர் பதவிக்கு மரியாதை அளிக்கும் வகையில்தான் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார். முன்னதாக திமுகவை சேர்ந்த கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ள நிலையில் தங்கம் தென்னரசு இந்த விளக்கத்தை அளித்து உள்ளார். 

4.17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, நாமக்கல், திருவண்ணாமலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

5.11வது முறையாக கொடியேற்றிய மோடி

நாடு முழுவதும் 78ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தொடர்ந்து 11ஆவது ஆண்டாக தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். 

6.மதசார்பற்ற சிவில் சட்டம் தேவை

அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான மதசார்பற்ற பொது சிவில் சட்டம் என்பதே நாட்டின் இப்போதைய தேவை என சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மதத்தின் அடிப்படையில் பிரித்து ஆளும் தற்போதைய சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், மதத்தால் நாடு பிளவுபடுத்தப்படுவதை மதச்சார்பற்ற சிவில் சட்டம் தடுக்கும் என்றும் மோடி கூறினார். 

7.கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர்!

தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தின விழா உற்சாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். 

8.முதல்வர் மருந்தகங்கள் திட்டம்!

வரும் பொங்கல் திருநாள் முதல் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தங்கள் திட்டம் தொடங்கப்படும் என்று தனது சுதந்திர தின உரையில்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

9.வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது

மூத்த அரசியல்வாதியும், தமிழ் ஆர்வலருமான குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதினையும், சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருதினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 10.ராஜினாமா ஏன்? - குஷ்பு விளக்கம்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததில் யாருடைய அழுத்தமும் இல்லை என்று நடிகை குஷ்பு விளக்கம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.