TOP 10 NEWS: குரூப் 1 தேர்வு முடிவுகள் ரிலீஸ்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதர் கைது! இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதர் கைது, குரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியீடு, ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை ராதிகா பேட்டி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என அறிவிப்பு. கோப்பு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் 7 மாதம் எடுத்ததில் வியப்பு என கருத்து.
2.எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது
100 கோடி ரூபாய் நிலம் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது முன்ஜாமின் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
3.டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வு ரிலீஸ்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்திருந்தது. துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப்-1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன. குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
4.மேட்டூர் அணையில் மின் நிலையம்
சேலம் மாவட்டம் மேட்டூரில் 5,947 கோடியில் நீரேற்று புனல் மின் நிலையம் (Pumped Storage Project) அமைக்கிறது க்ரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 7 நாட்களிலேயே முதற்கட்ட பணிகளை தொடங்கியது அந்நிறுவனம். ரூ.20,114 கோடி முதலீட்டில் மொத்தம் 3 புனல் மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
5.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பதில்
முறையாக ஆய்வு செய்யாமல் மாநில பாடத்திட்டத்தை குறை சொல்ல கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில். தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது தமிழ்நாடு பாடத்திட்டம் மிக மோசமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி இருந்தார்.
6.முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி
தமிழ்நாட்டுக்கு வறட்சிக்கும் நிதியில்லை; வளர்ச்சிக்கும் நிதியில்லை. நிதி தராமல் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கின்றது. 39 எம்.பிக்களை வைத்துள்ள திமுக எதையுமே செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து.
7.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.
8.உணவு பாதுகாப்புத்துறை சோதனை
சென்னை, சைதாப்பேட்டையில் இயங்கி வந்த இறைச்சிக் கடை குடோனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. ஆயிரக்கணக்கான கெட்டுப்போன ஆட்டுக்கால்களைப் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை.
9.தமிழ்நாட்டிலும் கமிட்டி வேண்டும்
ஹேமா கமிட்டி போன்று தமிழ்நாட்டிலும் கமிட்டி அமைக்க வேண்டும். தமிழ் திரையுலகம் மட்டும் இன்றி எல்லாதுறைகளிலும் இந்த பிரச்னைகள் உள்ளது என நடிகை ராதிகா பேட்டி.
10.மேயர் பிரியா பேட்டி
கூவம் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சிவகங்கை எம்.பி.கார்தி சிதம்பரத்தின் கடிதத்திற்கு உரிய பதில் அளிப்பேன் என சென்னை மேயர் பிரியா பேட்டி.
டாபிக்ஸ்