Thangam Thennarasu: ஆளுநர் தேநீர் விருந்து..தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
- சுதந்திர தினத்தையொட்டி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆளுநர் பதவிக்கும் பொறுப்புக்கும் மரியாதை அளிக்கும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, திமுக சார்பில் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதன்கிழமை அறிவித்திருந்தார்.