TOP 10 NEWS: வேட்டையனால் தள்ளி போன கங்குவா திரைப்படம்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் உதயநிதி! இன்றைய டாப் 10 செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: வேட்டையனால் தள்ளி போன கங்குவா திரைப்படம்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் உதயநிதி! இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: வேட்டையனால் தள்ளி போன கங்குவா திரைப்படம்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் உதயநிதி! இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Aug 25, 2024 08:33 PM IST

Tamil Top 10 News: முத்தமிழ் முருகன் மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின், ஒத்திவைக்கப்பட்ட கங்குவா பட ரிலீஸ், அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் ஒத்திவைப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: வேட்டையனால் தள்ளி போன கங்குவா திரைப்படம்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் உதயநிதி! இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: வேட்டையனால் தள்ளி போன கங்குவா திரைப்படம்! முத்தமிழ் முருகன் மாநாட்டில் உதயநிதி! இன்றைய டாப் 10 செய்திகள்!

1.முத்தமிழ் முருகன் மாநாடு 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் இரண்டாவது நாளில் 1300 ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பாடல் மற்றும் இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கட்டுரையாளர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்தனர். 

2.முருகன் மாநாட்டில் உதயநிதி 

திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு, எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கின்ற அரசு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது நமது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்கள். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் தான் நமது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இப்படி நம்முடைய தலைவர்கள் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறநிலையத்துறையின் சார்பாக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என முத்தமிழ் முருகன் மாநாட்டில் அமைசர் உதயநிதி பேச்சு.

3.நாம் தமிழர் கட்சியினர் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் மீது அவதூறு பரப்பிய புகாரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

4.அண்ணா பல்கலை. தேர்வு கட்டணம் உயர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் அடுத்த ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். 

5.விஜயகாந்த் சிலை திறப்பு 

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது தேமுதிக கட்சி அலுவலகத்தில் முழு உருவசிலை திறக்கப்பட்டு உள்ளது. 

6.ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு எதிராக இருந்தால் திமுக போராடும் என திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி. 

7.ஒசூரில் சாலை விபத்து 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து என 13 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து. 

8.உண்மை கண்டறியும் சோதனை 

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை.

9.நடிகர்கள் மீது பாலியல் புகார்

நடிகைகளின் பாலியல் புகார் காரணமாக மலையாள நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார். 

10.கங்குவா திரைப்படம் ஒத்திவைப்பு 

வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.