TOP 10 NEWS: GOAT சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி முதல் விநாயகர் சதுர்த்தி சர்ச்சை வரை! டாப் 10 நியூஸ்!-todays evening top 10 news including govt permission for special screening of goat movie - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: Goat சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி முதல் விநாயகர் சதுர்த்தி சர்ச்சை வரை! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: GOAT சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி முதல் விநாயகர் சதுர்த்தி சர்ச்சை வரை! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Sep 04, 2024 06:57 PM IST

TOP 10 NEWS: கோட் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி, விஜய் மாநாட்டு குறித்து தமிழிசை பேட்டி, திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

TOP 10 NEWS: GOAT சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி முதல் விநாயகர் சதுர்த்தி சர்ச்சை வரை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: GOAT சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி முதல் விநாயகர் சதுர்த்தி சர்ச்சை வரை! டாப் 10 நியூஸ்!

1.கோட் சிறப்பு காட்சிக்கு அனுமதி 

நடிகர் விஜய் நடிப்பில் நாளை ரிலீஸ் ஆகும் கோட் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. 

2.விநாயகர் சதுர்த்தி உறுதி மொழி சர்ச்சை 

விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்து பள்ளிகளில் மாணவர்கள் உறுதி மொழி எடுப்பது குறித்து பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கேட்டு உள்ளது.

3.தம்பி விஜய் மீது பயம் ஏன்?

விஜய் அவர்கள் ஒரு மாநாடு நடக்கும் போது ஒரு இடம் தருவதில் என்ன பிரச்னை. ஏன் அவ்வளவு பயம்?, இடம் கொடுத்தால் மடத்தை பிடித்துக் கொள்வார் என நீங்கள் நினைக்கிறீர்களா?. இதனால் நாங்கள் தம்பி விஜய்க்கு ஆதரவாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.

4.தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையம்

சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது. 

5.திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

நாமக்கல் அருகே அரசுப்பள்ளியின் சமையல் கூடத்தில் மனிதக் கழிவு வீசப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவற்றிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இழிசெயல்களை செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது எனில், இந்த விடியா ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஏற்கனவே #வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிசெயல் ஏற்பட்டபோது, அதற்கான உரிய நீதியை இந்த விடியா அரசு நிலைநாட்டியிருந்தால், இன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது என ஈபிஎஸ் கருத்து. 

6.வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகள் உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார். 

7.அடிக்க பாய்ந்த காவலர் கைது

தருமபுரியில் உணவக உரிமையாளரை ஷூவை கழற்றை அடிக்கப்பாய்ந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்து காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. 

8.இயக்குநர் அட்லீக்கு நோட்டீஸ்

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் கதை திருடப்பட்டதாக் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

9.விஜயை மறைமுகமாக சாடும் அமைச்சர்

முதல் நாள் முதல் காட்சிக்கு 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் நடிகர்களா நாட்டை காப்பார்கள் என்று நடிகர் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்.

10.மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்து

பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.