TOP 10 NEWS: அன்னபூர்ணா ஹோட்டல் அறிக்கை முதல் திருமாவளவன் பேட்டி வரை! இன்றைய டாப் 10 செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: அன்னபூர்ணா ஹோட்டல் அறிக்கை முதல் திருமாவளவன் பேட்டி வரை! இன்றைய டாப் 10 செய்திகள்

TOP 10 NEWS: அன்னபூர்ணா ஹோட்டல் அறிக்கை முதல் திருமாவளவன் பேட்டி வரை! இன்றைய டாப் 10 செய்திகள்

Kathiravan V HT Tamil
Sep 14, 2024 07:27 PM IST

TOP 10 NEWS: ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக கோவை அன்னப்பூர்ணா நிறுவனம் விளக்கம், பாஜகவை கண்டித்து செல்வப்பெருந்தகை போராட்டம், திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் பேட்டி, அன்னப்பூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி நீக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

TOP 10 NEWS: அன்னப்பூர்ணா ஹோட்டல் அறிக்கை முதல் திருமாவளவன் பேட்டி வரை! இன்றைய டாப் 10 செய்திகள்
TOP 10 NEWS: அன்னப்பூர்ணா ஹோட்டல் அறிக்கை முதல் திருமாவளவன் பேட்டி வரை! இன்றைய டாப் 10 செய்திகள்

1.கோவை அன்னபூர்ணா உணவகம் அறிக்கை 

ஜிஎஸ்டி பற்றிய உரையாடல் மற்றும் மன்னிப்பு கேட்கப்பட்ட விவகாரத்தை இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புகிறோம். தேவையற்ற யூகங்களுக்கும், அரசியல் ரீதியான தவறான புரிதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என கோவை அன்னப்பூர்ணா உணவகம் விளக்கம். 

2.வீடியோவை வெளியிட்ட நிர்வாகி நீக்கம் 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னப்பூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பாஜக நிர்வாகி சதீஷ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கம். 

3.என்னை மாநாட்டிற்கு அழைக்கவில்லை 

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு இதுவரை என்னை அழைப்பு இல்லை. ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. 

4.நடிகர் விஜய் நடிக்கும் கடைசி பட போஸ்டர்

"ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் விரைவில் வருகிறார்" என்ற வாசகத்துடன் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்திற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. 

5.டாஸ்மாக் பார்களை கண்காணிக்க உத்தரவு 

சென்னையில் இயங்கி வரும் டாஸ்மாக் பார்களை கண்காணிக்க மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பார்கள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். விதிகளை மீறி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு பிரிவுக்கு உத்தரவு. விதிகளை மீறும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல். 

6.திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை 

திமுக கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. இதுவரை கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று மதுரையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.

7.பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 

ஜிஎஸ்டி வரி விவகாரம் குறித்த கலந்துரையாடலில் பேசிய கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தை கண்டித்து கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம். 

8.ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு அன்புமணி எதிர்ப்பு

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன. பணக்காரர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஹெலிகாப்டர் சேவைக்காக மீட்க முடியாத சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்த தமிழக அரசே துணை போவது கண்டிக்கத்தக்கதாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.

9.தலைவர்கள் ஓணம் பண்டிகை வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ஓணம் பண்டிகை வாழ்த்து.

10.ராமர் குறித்து ஆளுநர் பேச்சு 

ராமர் வடநாட்டுக்கடவுள் என்ற கருத்து தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டதால் நமது இளைஞர்கள் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இழந்து உள்ளனர். ராமர் நமது நாட்டை இணைக்கும் பசையாக உள்ளார். அவரை இங்கு இருந்து நீக்க முயன்றால் பாரதம் இருக்காது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.