Tamil Top 10 News: ’தாக்கல் ஆன வஃக்பு வாரிய மசோதா! இயற்கை எய்திய புத்ததேவ் பட்டாச்சாரியா’ பிற்பகல் டாப் 10 நியூஸ்!
Afternoon Top 10 News: வஃக்பு வாரிய திருத்த மசோதா, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா மரணம், மா மதுரை திருவிழா, வினேஷ் போகத் ஓய்வு உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ!
Afternoon Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வஃக்பு வாரிய மசோதா தாக்கல்
நாடாளுமன்ற மக்களவையில் வஃக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ, வக்ஃப் சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்த அரசுச் சொத்தும், வக்ஃப் சொத்தாகக் கருதப்படாது என இந்த மசோதா கூறுகின்றது. வக்ஃப் வாரிய சொத்தா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் உள்ளிட்ட ஷரத்துகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன.
புத்ததேவ் பட்டாச்சாரியா காலமானார்
மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். வங்காளத்தில் 34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியின் போது, பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி சிபிஎம் முதலமைச்சராக இருந்தார், அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
ஜெகதீப் தங்கர் வேதனை
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகல் நிலையை எண்ணி நாடே வருந்துவதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் வேதனை தெரிவித்து உள்ளார்.
வினேஷ் போகத்திற்கு பரிசு அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சாதனையாருக்கான பரிசுத் தொகை வினேஷ் போகத்திற்கு வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் நயாப்சிங் சைனி அறிவிப்பு. ஹரியானா அரசின் விளையாட்டுக் கொள்கையின்படி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 2.5 கோடியும் வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் போகத் ஓய்வு
நம்பிக்கைகள் அனைத்தும் தகர்ந்துவிட்டதால், போராடும் மனவலிமையை இழந்துவிட்டதாக சர்வதேச மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீராங்கனை வினேஷ் போகல் வேதனை தெரிவித்து உள்ளார்.
வெங்காய மாலை அணிந்து போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெங்காய மாலை அணிந்து போராட்டம் நடத்தின. ஆளும் பாஜக ஆட்சியில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக கூறி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மா மதுரை விழாவில் முதல்வர் உரை
மதுரையில் பண்பாட்டை கொண்டாடும் ’மா மதுரை’ விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். ஊரைப் பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியும் தர வேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டுத் திருவிழாவாக இதை நீங்கள் நடத்திக்கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என முதலமைச்சர் கூறினார்.
மருத்துவர் சுப்பையா மனு தள்ளுபடி
பாலியல் புகாரில் பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
நாளை விசாரணை
முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு
நியூசிலாந்துக்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்