Vinesh Phogat: இந்தியாவுக்கு அடுத்த பேரிடி! மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு! இனி வலிமை இல்லை என வேதனை!-olympic disqualifier vinesh phogat announces his retirement from wrestling - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Vinesh Phogat: இந்தியாவுக்கு அடுத்த பேரிடி! மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு! இனி வலிமை இல்லை என வேதனை!

Vinesh Phogat: இந்தியாவுக்கு அடுத்த பேரிடி! மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு! இனி வலிமை இல்லை என வேதனை!

Kathiravan V HT Tamil
Aug 08, 2024 02:09 PM IST

Vinesh Phogat Retirement: மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்து உள்ளார்.

Vinesh Bhogat: இந்தியாவுக்கு அடுத்த பேரிடி! மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு!
Vinesh Bhogat: இந்தியாவுக்கு அடுத்த பேரிடி! மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு! (Getty)

என்னை மன்னித்துவிடுங்கள் 

தனது சமூகவலைத்தள கணக்கு மூலம் ஓய்வை அறித்து உள்ள வினேஷ் போகத், "மல்யுத்தத்தில் என்னை எதிர்த்து வென்றேன், நான் தோற்றேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் சிதறடிக்கப்பட்டது.  இனி எனக்கு எந்த வலிமையும் இல்லை, தயவுசெய்து அனைவரும் என்னை மன்னியுங்கள்” என தெரிவித்து உள்ளார். 

ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் 

29 வயதான வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் ஆவார். 

பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து இருந்த நிலையில் அதிக எடை இருந்ததன் காரணமாக மல்யுத்த இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  

பட்டினி கிடப்பது, தண்ணீர் உள்ளிட்ட திரவ பொருட்களை தவிர்ப்பது மற்றும் இரவு முழுவதும் விழித்திருந்து வியர்வையை வெளியேற்றுவது உள்ளிட்ட தீவிரமான எடை குறைப்பு நடவடிக்கைகளில் வினேஷ் போகத் ஈடுபட்டாலும் அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.  

மேல்முறையீடு செய்த போகத்

இருப்பினும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் மேல்முறையீடு செய்தார். அனுமதிக்கப்பட்ட எடையில் இருந்து 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் தனக்கு கூட்டு முறையில் வெள்ளிப்பதக்கம் தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து உள்ளார்.  

இந்த சம்பவம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற கனவுடன் காத்திருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வீராங்கணை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்க பதக்கம் அமெரிக்க வீரங்கனை சாராவுக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் 2 பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மல்யுத்த விளையாட்டு குடும்ப பின்னணி

இந்தியாவின் புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வினேஷ் போகத். தனது உறவினர்களான கீதா போகத் மற்றும் பபிதா குமாரி ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மல்யுத்து விளையாட்டில் தனக்கென தனித்த இடத்தையும் பிடித்துள்ளார்.

மல்யுத்த விளையாட்டை இவருக்கு அறிமுகப்படுத்தியது, இவரது மாமாவும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் சிங் போகத். மல்யுத்தத்த விளையாட்டானது ஆண்களுக்கான விளையாட்டு என கருதிய காலட்டத்தில் பல்வேறு எதிர்ப்பையும் மீறி வினேஷ் போகத்தை களமிறங்கிய மகாவீர் சிங் போகத் வெற்றியும் கண்டார்.

வினேஷ் ஒன்பது வயதாக இருந்தபோது தனது தந்தையின் அகால மரணத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வினேஷ் மல்யுத்த விளையாட்டில் சிறந்த வழிகாட்டுதல்களுடன் வெற்றி நடை கண்டார்.

ஹரியானா அரசு அறிவிப்பு

ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகத்திற்கு முறையான வெகுமதிகள் தரப்படும் என்று ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்து உள்ளார். 

வினேஷ் போகத்தை "சாம்பியன்" என்று அழைத்த ஹரியானா முதல்வர், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு இணையான மரியாதையையும் வெகுமதியையும் ஹரியானா அரசு வினேஷ் போகத்திற்கு அளிக்கும் என்று கூறினார். ஹரியானா அரசின் விளையாட்டுக் கொள்கையின்படி,  ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 2.5 கோடியும் வழங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.