Morning Top 10 News: ‘சங்காத்தமே வேணாம்! ஓய்வை அறித்த வினேஷ்! வஃக்பு வாரியத்திற்கு ஆப்பு ரெடி!’ காலை டாப் 10 செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Morning Top 10 News: ‘சங்காத்தமே வேணாம்! ஓய்வை அறித்த வினேஷ்! வஃக்பு வாரியத்திற்கு ஆப்பு ரெடி!’ காலை டாப் 10 செய்திகள்!

Morning Top 10 News: ‘சங்காத்தமே வேணாம்! ஓய்வை அறித்த வினேஷ்! வஃக்பு வாரியத்திற்கு ஆப்பு ரெடி!’ காலை டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Aug 08, 2024 03:51 PM IST

Morning Top 10 News: வினேஷ் போகல் ஓய்வு, வஃக்பு வாரிய திருத்த சட்டம், வயநாடு குறித்த ராகுலின் கவலை, ஈபிஎஸ்க்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி உள்ளிட்ட லேட்டஸ்ட் செய்திகள் உடன் இன்றைய காலை டாப் 10 நியூஸ் இதோ!

Morning Top 10 News: ‘சங்காத்தமே வேணாம்! ஓய்வை அறித்த வினேஷ்! வஃக்பு வாரியத்திற்கு ஆப்பு ரெடி!’ காலை டாப் 10 செய்திகள்!
Morning Top 10 News: ‘சங்காத்தமே வேணாம்! ஓய்வை அறித்த வினேஷ்! வஃக்பு வாரியத்திற்கு ஆப்பு ரெடி!’ காலை டாப் 10 செய்திகள்!

ஓய்வை அறித்த வினேஷ் போகத் 

மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்து உள்ளார். தனது சமூகவலைத்தள கணக்கு மூலம் ஓய்வை அறித்து உள்ள வினேஷ் போகத், "மல்யுத்தத்தில் என்னை எதிர்த்து வென்றேன், நான் தோற்றேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் சிதறடிக்கப்பட்டது. என்னை மன்னியுங்கள்” என தெரிவித்து உள்ளார்.

வஃக்பு வாரிய சட்ட மசோதா இன்று தாக்கல் 

வஃக்பு வாரிய சட்டத் திருத்த மசோத மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ, வக்ஃப் சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்த அரசுச் சொத்தும், வக்ஃப் சொத்தாகக் கருதப்படாது என இந்த மசோதா கூறுகின்றது. 

நீட் முதுகலை கேள்வித்தாள் கசிவா?

சமூகவலைத்தளங்களில் முதுநிலை நீட் வினாத் தாள் வெளியானதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. NEET-PG கேள்வித்தாள் தொடர்பான விவரங்கள் டெலிகிராம் சேனலில் கசிந்து உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) மறுப்பு தெரிவித்து உள்ளது உடன் வினாத்தாள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளது. 

வயநாடு நிலச்சரிவு குறித்து ராகுல் கருத்து 

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்து உள்ளார். தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் அண்டை மாநிலங்களின் உதவியுடன், மத்திய மற்றும் மாநில அமைப்புகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.வி

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று எஸ்.எஸ்.எல்.வி டி3 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. "எஸ்.எஸ்.எல்.வி.யின் மூன்றாவது மற்றும் இறுதி விண்கலமான இஓஎஸ்-08 மைக்ரோ செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்திய நேரப்படி 9.27 மணிக்கு விண்ணில் ஏவும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது. 

சந்திரயான் -3 குழுவுக்கு விருது 

வீரமுத்துவேல் தலைமையிலான சந்திராயன் - 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மிக உயர்ந்த அறிவியல் விருதான முதல் விக்யான் ரத்னா புரஸ்கார் விருதுக்கு புகழ்பெற்ற உயிர் வேதியியலாளர் கோவிந்தராஜன் பத்மநாபன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டி 

ஒலிம்பிக் பளுத்தூக்கும் போட்டியில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார் இந்திய வீரர் மீராபாய் சானு.

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 2 பேர் பூமி திரும்ப நாசா ஏற்பாடு செய்து உள்ளது. 

ஈபிஎஸ்க்கு டி.ஆர்.பி.ராஜா பதில் 

பா.ஜ.கவோடு நேரடியாக கைகோர்த்திருந்த தனது ஆட்சிக்காலத்தில் ஒரு பைசா முதலீட்டைக் கூட ஜவுளித்துறைக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை. திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில்தான் அண்மையில் ஜவுளித்துறைக்காக 6% வட்டிமானியம் உள்ளிட்ட 500 கோடி ரூபாய்க்கு மேலான பல ஊக்கத்திட்டங்களை அறிவித்திருக்கிறது திராவிட மாடல் அரசு. ஆகையால்தான் 2021 முதல் 20,162.44 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஜவுளித் துறையில் மட்டும் வந்து குவிந்திருக்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில். 

மீனவர்கள் மீது தாக்குதல் 

வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார். மீனவர்களை தாக்கி இலங்கை கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை பறித்துள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.