Tamil Top 10 News: 11வது முறையாக கொடியேற்றிய மோடி! டீ குடிக்க செல்லும் ஸ்டாலின்! இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
Tamil Top 10 News: 11ஆவது முறையாக தேசிய் கொடி ஏற்றிய பிரதமர் மோடி, முதல்வர் மருந்தகம் திட்டத்தை அறிவித்த ஸ்டாலின், குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Afternoon Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
11வது முறையாக கொடியேற்றிய மோடி
நாடு முழுவதும் 78ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தொடர்ந்து 11ஆவது ஆண்டாக தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
மகளிர் பாதுகாப்பை உறுதி செய்க!
நாடு முழுவது, மகளிர் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மேற்கு வங்க பெண் பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் பேசினார்.
75ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள்!
நாடு முழுவதும் புதிதாக 75 ஆயிரம் மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார். மருத்துவம் பயில்வதற்காக இந்தியா மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளதாக கூறிய அவர், இதனை மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.
கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர்!
தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தின விழா உற்சாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். மேலும் வீரதீர செயல்கள் நிகழ்த்தில் மக்களை பாதுகாத்தவர்கள் மற்றும் சேவை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மருந்தகங்கள் திட்டம்!
வரும் பொங்கல் திருநாள் முதல் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தங்கள் திட்டம் தொடங்கப்படும் என்று தனது சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு
விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாத ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரம் ரூபாயாகவும், தியாகிகளின் குடும்ப ஓய்வுவூதியம் 11ஆயிரம் ரூபாயில் இருந்து 11ஆயிரத்து 500 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது
மூத்த அரசியல்வாதியும், தமிழ் ஆர்வலருமான குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதினையும், சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருதினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
போதை பழக்கம் அதிகரிப்பு! - ஆளுநர் கவலை!
தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்து உள்ளார்.
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் முதல்வர்
ஆளுநர் பதவிக்கு மரியாதை அளிக்கும் வகையில்தான் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார். முன்னதாக திமுகவை சேர்ந்த கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ள நிலையில் தங்கம் தென்னரசு இந்த விளக்கத்தை அளித்து உள்ளார்.
ராஜினாமா ஏன்? - குஷ்பு விளக்கம்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததில் யாருடைய அழுத்தமும் இல்லை என்று நடிகை குஷ்பு விளக்கம் அளித்து உள்ளார். பாஜக தலைமை அலுவலகம் ஆன கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிதான் தனது அரசியல் விளையாட்டு தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
டாபிக்ஸ்