TOP 10 NEWS: ’துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி! விஜய் குறித்து சீமான் கருத்து!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: துணை முதலமைச்சர் பதவி குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து, விஜய் அரசியல் வருகை குறித்து சீமான் கருத்து, காக்கா தோப்பு பாலாஜி எண்கவுண்டர், புதுச்சேரியில் பந்த் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
2.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
என்னை துணை முதலமைச்சர் ஆக்குவது குறித்த முடிவை முதலமைச்சர் எடுப்பார். நேற்று நடந்த கூட்டத்தில் தொடர்கள் விருப்பத்தை அண்ணன் பழனிமாணிக்கம் கூறி உள்ளார். இது முழுக்க முழுக்க முதலமைச்சர் அவர்களின் தனிப்பட்ட முடிவு என உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
3.காக்கா தோப்பு பாலாஜி எண்கவுண்டர்
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் என்கவுண்டர் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணை.
4.காவல்துறை மீது காக்கா தோப்பு பாலாஜி தாய் குற்றச்சாட்டு
கடந்த 10 ஆண்டுகளாக காக்கா தோப்பு பாலாஜி மீது ஒரு வழக்கு கூட கிடையாது. போலீசார் என்கவுண்டர் செய்ததாக அவரது தாய் கண்மணி குற்றச்சாட்டி உள்ளார்.
5.புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் பந்த்
மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் பந்த். பெரும்பாலான இடங்களில் கடையடைப்பு மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம்.
6.கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
நிஃபா வைரஸ் அச்சம் காரணமாக தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் அடைந்து உள்ளது. பொதுமக்களின் வெப்பநிலையை சோதித்த பின்னரே எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
7.பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு
நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு. ஆளுநரின் வருகைக்கு எதிராக விசிக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம்.
8.விஜய் வருகையால் பாதிப்பு இல்லை
நடிகர் விஜயின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, எங்களால்தான் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் பாஜகவுக்கு அளித்த ஆதரவை விளக்கினால் திமுகவின் 22 எம்.பிக்களும் பாஜகவை ஆதரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
9.ராகுல் காந்திக்கு மிரட்டல் - முதலமைச்சர் கண்டனம்
ராகுல் காந்திக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். பா.ஜ.க. தலைவர் ஒருவர் "ராகுல் காந்தி அவர்களின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்" எனவும், ஷிண்டே சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் "ராகுல் காந்தி அவர்களின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு" எனவும், இன்ன பிற வகைகளிலும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என முதலமைச்சர் கருத்து.
10.கஞ்சா பரவல் குறித்து ராமதாஸ் வேதனை
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடமிருந்த கஞ்சா போதைப் பழக்கம் இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்ட நிலையில் அதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும், போதைப் பொருட்களின் விற்பனைக்கு மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்