TOP 10 NEWS: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு முதல் மௌனம் கலைத்த திருமா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு முதல் மௌனம் கலைத்த திருமா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு முதல் மௌனம் கலைத்த திருமா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Sep 25, 2024 01:42 PM IST

TOP 10 NEWS: தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு, ஆளுநருக்கு சபாநாயகர் கண்டனம், தங்கம் விலை உயர்வு, திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் கருத்து, மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

TOP 10 NEWS: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு முதல் மௌனம் கலைத்த திருமா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு முதல் மௌனம் கலைத்த திருமா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

1.காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உடன் நிறைவடைய வேண்டிய காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 

2.ஆளுநர் கருத்துக்கு சபாநாயகர் எதிர்ப்பு 

ஆளுநர் ஆர்.என்.ரவி கோட்சே பார்வையில் இருக்கிறார். அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா என்பது மதசார்பற்ற நாடு என சபாநாயகர் அப்பாவு கருத்து. 

3.தயாநிதி மாறன் வழக்கில் ஈபிஎஸ் மனு

திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது வாதங்கள் நிறைவடைந்து வரும் அக்டோபர் 16ம் தேதிக்கு உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

4.இயக்குநர் மோகன் ஜி மீது வழக்கு 

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய திரைப்பட இயக்குநர் மோகன் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு.

5.திமுக கூட்டணியில் சலசலப்பு இல்லை 

திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை என கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி. 

6.தங்கம் விலை உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கத்தின் விலை 7 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை. 

7.ஸ்ரீமதியின் தாய் மாமா கைது 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்தனர விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாததால் கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வருகின்றனர்.

8.பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர்

மாநில உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே கழகத்தின் வலிமை. ஆட்சியதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. 

9.மருத்துவர் ராமதாஸ் கண்டனம் 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை இலக்கியம் (பி.லிட்) படித்து தேர்ச்சி பெற்றவர்களை, அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றும் வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து. 

10.நிறுத்தி வைக்கப்பட்ட நியமனங்கள்!

தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் வரை அனைத்து நிலை ஆசிரியர் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.