TOP 10 NEWS: ’பெரியார், மோடி பிறந்தநாள் முதல் விஜய் வாழ்த்து வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!-todays afternoon top 10 news including periyar and modis birthday dmk mupperum vizha - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’பெரியார், மோடி பிறந்தநாள் முதல் விஜய் வாழ்த்து வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: ’பெரியார், மோடி பிறந்தநாள் முதல் விஜய் வாழ்த்து வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Sep 17, 2024 01:59 PM IST

TOP 10 NEWS: தந்தை பெரியாருக்கு தலைவர்கள் மரியாதை, மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விஜய் வாழ்த்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’பெரியார், மோடி பிறந்தநாள் முதல் விஜய் வாழ்த்து வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: ’பெரியார், மோடி பிறந்தநாள் முதல் விஜய் வாழ்த்து வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

1.தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் 

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும். 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிப்பதால் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

2.கால்நடை மருத்துவப்படிப்பு சேர்க்கை 

கால்நடை மருத்துவப்படிப்பில் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

3.தந்தை பெரியாருக்கு மரியாதை 

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை. 

4.பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து 

நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. 

5.மோடி மற்றும் பெரியாருக்கு விஜய் வாழ்த்து 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெரியார் பிறந்தநாளுக்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து. 

6.மீட்கபட்ட தமிழர்கள் சென்னை வருகை 

உத்ராகண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர். தமிழக அரசு செலவில் 20 பேர் ரயில் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். 

7.தச்சநல்லூரில் சாலை விபத்து 

நெல்லை தச்சநல்லூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. 

8.நீர்நிலை பாதுகாவலர் விருது 

நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் விதமாக நீர்நிலை பாதுகாவலர் விருது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 

9.திமுக பவள விழா கொண்டாட்டம் 

சென்னையில் இன்று மாலை திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெறுகிறது. “நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

10.மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம் 

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தேவைப்படும் காலங்களில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர்களாக பணியாற்ற தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு விளம்பரத்தை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கானக் குழு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும், கல்வியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை என மருத்துவர் ராமதாஸ் கருத்து.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.