TOP 10 NEWS: டாடா மோட்டாஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் முதல் சரிந்த தங்கம் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!-todays afternoon top 10 news including foundation stone for tata motors low gold prices pm condoles pappammal death - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: டாடா மோட்டாஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் முதல் சரிந்த தங்கம் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: டாடா மோட்டாஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் முதல் சரிந்த தங்கம் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Sep 29, 2024 01:50 PM IST

TOP 10 NEWS: டாடா மோட்டாஸ் நிறுவனத்திற்கு அடிக்கல், ஏடிஎம் கொள்ளையர்கள் மீது வழக்கு, டைடல் பூங்கா அமைக்க டெண்டர், திமுகவுக்கு எதிராக அதிமுக உண்ணாவிரதம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: டாடா மோட்டாஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் முதல் சரிந்த தங்கம் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: டாடா மோட்டாஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் முதல் சரிந்த தங்கம் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

1.ஏடிஎம் கொள்ளையர்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் மீது விபத்தை ஏற்படுத்துதல், காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல், கொலை முயற்சி, கூட்டுச்சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

2.டைடல் பூங்கா அமைக்க டெண்டர் 

கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்க அமைக்க தமிழ்நாடு அரசு பணிகளை தொடங்கி உள்ளது. வரைபட தயாரிப்பு, திட்டமேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. 

3.டாடா மோட்டாஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் 

உலகின் பெரு நிறுவனங்கள் உற்பத்தி தொடங்குவதற்கு தமிழ்நாடு முகவரியாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என டாடா மோட்டார்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

4.நவீன வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் 

தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிநவீன உற்பத்தி திறன் கொண்ட வாகன ஆலையை ராணிப்பேட்டையில் டாடா நிறுவனம் அமைக்கின்றது. அத்க செயல்திறன் கொண்ட நவீன வாகனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும் என்று டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பேச்சு. 

5.திமுகவுக்கு எதிராக உண்ணாவிரதம் 

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்க்கேட்டை கண்டித்து வரும் அக்டோபர் 9ஆம் தேதி மதுரையில் அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 

6. 4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை 

செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 

7.தங்கம் விலை 40 ரூபாய் குறைந்தது 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 95 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

8. சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தால் ஆலையை சுற்றி உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம். 

9. அணுக்கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அணு உலைகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு அருகிலேயே அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசு துடிப்பதும், அதற்கு தமிழக அரசு ஓடோடிச் சென்று அனுமதி கொடுப்பதும் கண்டிக்கத்தக்கவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.

10. பாப்பம்மாள் மறைவுக்கு மோடி இரங்கல் 

பாப்பம்மாள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கின்றது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் அவர் முத்திரை பதித்து உள்ளார். பாம்மாளின் கனிவான இயம்புகளூக்காக் மக்கள் அவரை போற்றினர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் என பிரதமர் மோடி ட்வீட்

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.