Kerala ATM Robbery : நாமக்கல்லை உலுக்கிய எண்கவுன்டர்.. கேரள ஏடிஎம்மில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்கள் கைது!
Kerala ATM Robbery : ஏடிஎம் கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட லாரி ராஜஸ்தான் பதிவெண் கொண்டது தெரியவந்துள்ளது.
Kerala ATM Robbery : கேரளாவில் உள்ள ஏ.டி.எம்-ல் கொள்ளையடித்த ரூ. 66 லட்சம் பணத்துடன் நாமக்கல் வழியே தப்பிச்செல்ல முயன்ற 7 கொள்ளையர்களை, காவல்துறையினர் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஒருவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டுள்ளார். மேலும் 5 பேர் கைதான நிலையில் ஒருவர் தப்பியோடியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளை சுற்றி அமைந்திருநத 3 ஏடிஎம்களில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருந்தனர். ஏடிஎம் மையத்திற்கு முக மூடி அணிந்து வந்திருந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங், கேஸ் கட்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து இன்று அதிகாலை பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து ஏடிஎம் மிஷிமில் கொள்ளை அடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்டனர் லாரியில் கோவையிலிருந்து சேலம் நோக்கி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் போலீசார் கோவை பக்கம் இருந்து சேலம் நோக்கி வந்த கண்டனர் லாரியை பின் தொடர்ந்து துரத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை 9:25 மணிக்கு சங்ககிரி அருகே பச்சாம்பாளையம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சர்வீஸ் சாலையில் திடீரென கண்டனர் லாரி திசை திருப்பி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது வழிநெடிகிலும் கண்டெய்னர் லாரி சாலையில் சென்ற வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. இத்த தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன் மற்றும் சங்ககிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் சங்ககிரி அருகே சன்னியாசிபட்டி பவர் ஆபீஸ் பகுதியில் கண்டனர் லாரியை சுற்றி வளைத்தனர்.
அப்பொழுது பொதுமக்கள் கல்லால் எரிந்து லாரியை தாக்கி நிறுத்தினர். அதனை தொடர்ந்து லாரியின் முன் பகுதியில் இருந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் கண்டனர் லாரியின் உள்பகுதியில் ஏடிஎம் மிஷினில் கொள்ளையடித்த பணம், மற்றும் சொகுசு கார் உள்ள இருந்ததாக கூறப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் சிலர் உள்ளே இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கண்டெய்னர் லாரியின் பின் கதவை திறந்தால் மர்ம கும்பல் வெடிபொருள்களால் மக்களையோ போலீஸாரியோ தாக்கி விடுவார்கள் என சந்தேகப்பட்ட போலீசார் கண்டெய்னர் லாரியை நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு காட்டுக்குள் கொண்டு சென்றனர். அங்கு வெடிபொருள் நிபுணர்களை வரவழைத்து கண்டனர் லாரியில் உள்ளே இருப்பவர்களை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். அப்பகுதியில் காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஒருவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டுள்ளார். மேலும் 5 பேர் கைதான நிலையில் ஒருவர் தப்பியோடியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்