Tamil Top 10 News: டோல்கேட் கட்டணம் உயர்வு முதல் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை வரை - காலை டாப் 10 செய்திகள்!
Tamil Top 10 News: டோல்கேட் கட்டணம் உயர்வு, டாக்காவில் மீண்டும் மாணவர் போராட்டம், டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை உள்ளிட்ட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Morning Tamil Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
டோல்கேட் கட்டணம் உயருகிறது
தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் வருகிற 1ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பரில் இக்கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி, கடந்த ஏப்ரலில் அமலாக இருந்த கட்டண உயர்வு தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஜூனில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வருகிற செப்.1இல் 5%-7% வரை கட்டணம் உயருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வானிலை ஆய்வு மையம் தகவல்
வடமேற்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு திசையில் தெற்கு ராஜஸ்தான், குஜராத் வழியே நகர்ந்து வடகிழக்கு அரபிக்கடல் பாகிஸ்தான் கடற்கரை பகுதியை 29ம் தேதி காலையில் அடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.