வங்கதேசத்தில் கலவரம்! தமிழகம் திரும்பிய 42 மாணவர்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  வங்கதேசத்தில் கலவரம்! தமிழகம் திரும்பிய 42 மாணவர்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு

வங்கதேசத்தில் கலவரம்! தமிழகம் திரும்பிய 42 மாணவர்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு

Jul 26, 2024 11:34 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 26, 2024 11:34 PM IST

  • வங்கதேசத்தில் வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது. அங்கு நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில், இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் எல்லை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் சொந்த மாநிலங்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் இருந்து கடந்த 3 நாள்களாக 166 மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து தொடர்ச்சியாக நான்காவது நாளாக ருஷ்ணகிரி, கடலூர், தருமபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 42 மாணவர்கள், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் மூலம் கிருஷ்ணகிரி, கடலூர், தருமபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 42 மாணவர்கள், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் மூலம் தமிழ்நாடு வந்தடைந்தனர். அவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்து பேசிய விடியோ காட்சிகள் இதோ

More